Sunday, October 21, 2012

Jeeva samadhi

Jeeva samadhi around chennai



               


Salem jeeva samadhi

Thursday, October 18, 2012

தன்னை அறிந்து இன்பமுற


தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலவே - வள்ளல் பெருமான்

உடல், மனம்  -  இது அனைத்துமே நாம் உருவாகியது,  நாம் என்பது உயிர். அதை உணரமாலே  வாழ்கிறோம். அதன் இயல்பு தெரியாமல் வாழ்கிறோம். நாம் யார் மற்றவர் யார் என்று தெரியாமல் வாழ்கிறோம். இது ஒரு வாழ்வா? உடலை மனதை மற்றவர் என்று நினைத்து வாழ்கிறோம்.

நம்மை எப்படி அறிவது?

'சத்தியஞான சபையை என்னுள் கண்டேன்' என்று வள்ளல் பெருமான் சொல்கிறார்.  அது எப்படி?

நம்மை அறிய தடை என்ன? அதை எப்படி விளக்குவது? நம் மனதை எங்கு வைத்தால் சும்மா இருக்கும்?

திருவடி-மெய்பொருள் என்பது என்ன? அது நம்முள் எங்கு உள்ளது?

நம்மை அறிய குரு எப்படி உதவி புரிகிறார்? குருவின் பங்கு என்ன? வள்ளல் பெருமான் செய்த தவம் என்ன?


Sunday, July 15, 2012

இராமதேவர் - பூஜாவிதி


ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும்
அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்
சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்
சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னை
நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்
நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்
வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று
விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1
போகாமல் நின்ற தோரையா நீதான்
பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றே
ஆகாம லானந்த வல்லி யாலே
அடிமுடியி னடுவாசி யாறுக் குள்ளே
வாகாமல் வாலையுடை மூலத் தாலே
வழிதோன்றும் மூன்றெழுத்தை யுரைக்கவேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலஞ்
சசிவட்டம் நடுக்கோண முக்கோண மாமே. 2
முக்கோண மூசுழிதற் கோண மாகி
முதலான மூலமணி வாலை தன்னில்
நாற்கோண நாலுவரை நயந்து காக்க
நாயகியாள் பரஞ்சோதி நாட்ட முற்றுத்
தீக்கோணத் திக்குதிசையிருந்த மாயம்
தெரிந்திடவே யுரைத்திட்டேன் விவர மாக
தாக்கோண விட்டகுறை வந்த தென்றால்
தனியிருந்து பார்த்தவனே சித்த னாமே. 3
சித்தான மூன்றெழுத்துச் செயலாஞ் சோதி
சீரியவை யுங்கிலியும்சவ்வு மாகி
முத்தான லட்சவுரு செபிக்கச் சித்தி
முற்றிடுமே யெதிரியென்ற பேய்கட் குந்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு
விரிவான முகக்கருவு மூன்று கேளு
சத்தான அதன்கருவும் சிலையில் வைத்துச்
சதுரான விதிவிவர மறியக் கேளே.

Saturday, July 14, 2012

காலம் இனியில்லை


யாத்திரைப் பத்து


புகவே வேண்டா புலன்களில்நீர் !!
புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் 

மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்

விடுமின் வெகுளி வேட்கைநோய் 
மிகவோர் காலம் இனியில்லை 


அச்சப்பத்து 




 கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்

வள்ளலார் கண்ணொளி பற்றி பாடிய பாடல்கள்

கண்ணொளி காட்டு மருந்து - அம்மை
கண்டு கலந்து களிக்கு மருந்து  -  நல்ல மருந்து 

ஏதம் அகற்றும் என் அரசே என் ஆருயிரே என்அறிவே
என்கண் ஒளியே என்பொருளே என் சற்குருவே என்தாயே  -
செல்வச் சீர்த்தி மாலை


கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே-
மகாதேவ மாலை 

கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே - .சற்குருமணி மாலை 



மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
மிக்க ஒளி மேவுகண்கள் - தெய்வமணி மாலை 



கண்ணே அக்கண்ணின் மணியே மணியில் கலந்தொளி செய்
விண்ணே வியன்ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
 பெண்ணே மலைபெறும் பெண்மணியே தெய்வப் பெண்ணமுதே
- வடிவுடை மாணிக்க மாலை 

கண்ணேஎன் இருகண் இலங்குமணியே என்உயிரே
என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
இருந்தசிவ மேஎன் அன்பே -- .திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்


Tuesday, May 22, 2012

தொழுகைக்குத் தயாராகும்போது??(Quran 5:6)

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) 
உங்கள் முகங்களையும்,முழங்கைகள் வரை 
உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;. 

உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;. 

உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - 
நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) 

இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;. 

தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், 
அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் 

பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்;. 

அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.

இறைவன் ஒருவரே!!

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!!

அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.


வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
  1. அவர் உரை மனம் கடந்து உள்ளார்.
  2. நம் உயிருக்கு உயிரானவர்.
  3. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாக உள்ளார்.
  4. கற்பனை முழுவதுங் கடந்து ஒளி தரும்  ஓர் அற்புதச் சிற்சபை.
  5. நம்மை இன்ற நற் தாயினும் இனிய பெருந்தயவு உள்ளவர்.
  6. சாதியும் மதமும்  சமயமும் காணா ஆதி அநாதியாம்.
  7. தநு கரணாதிகள்(மனம் சித்தம் அகங்காரம் புத்தி)  கடந்து அறியும் ஓர் அனுபவம்.
  8. வல்லதாய்  எல்லாம் ஆகி எல்லாமும் அல்லதாய் விளங்குபவர்.
  9. மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிப்பவர்.
  10. எங்கு எங்கு இருந்து உயிரெ எது வேண்டினும் அங்க அங்கு இருந்து அருள்பவர்.
  11. பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய் திகழ்வது
  12. சாதியும்  மதமும்  சமயமும் பொய் என ஆதியியில் உணர்த்தியவர்
  13. காட்டிய உலகெலாம் கருணையால்  சித்தியின் ஆட்டியல் புரிபவர்
  14. மூவகை சித்தி அளிப்பவர்; கரும சித்தி யோகா சித்தி ஞான சித்தி