Showing posts with label வள்ளல் பெருமான். Show all posts
Showing posts with label வள்ளல் பெருமான். Show all posts

Thursday, May 10, 2012

இறைவன் ஒருவரே

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!!

அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.


வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
  1. அவர் உரை மனம் கடந்து உள்ளார்.
  2. நம் உயிருக்கு உயிரானவர்.
  3. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாக உள்ளார்.
  4. கற்பனை முழுவதுங் கடந்து ஒளி தரும்  ஓர் அற்புதச் சிற்சபை.
  5. நம்மை இன்ற நற் தாயினும் இனிய பெருந்தயவு உள்ளவர்.
  6. சாதியும் மதமும்  சமயமும் காணா ஆதி அநாதியாம்.
  7. தநு கரணாதிகள்(மனம் சித்தம் அகங்காரம் புத்தி)  கடந்து அறியும் ஓர் அனுபவம்.
  8. வல்லதாய்  எல்லாம் ஆகி எல்லாமும் அல்லதாய் விளங்குபவர்.
  9. மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிப்பவர்.
  10. எங்கு எங்கு இருந்து உயிரெ எது வேண்டினும் அங்க அங்கு இருந்து அருள்பவர்.
  11. பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய் திகழ்வது
  12. சாதியும்  மதமும்  சமயமும் பொய் என ஆதியியில் உணர்த்தியவர்
  13. காட்டிய உலகெலாம் கருணையால்  சித்தியின் ஆட்டியல் புரிபவர்
  14. மூவகை சித்தி அளிப்பவர்; கரும சித்தி யோகா சித்தி ஞான சித்தி