முஃமின்களே! நீங்கள்
தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக)
உங்கள் முகங்களையும்,முழங்கைகள்
வரை
உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்;.
உங்களுடைய தலைகளை
(ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்;.
உங்கள் கால்களை இரு
கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) -
நீங்கள் பெருந்தொடக்குடையோராக
(குளிக்கக் கடமைப் பட்டோராக)
இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும்
சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்;.
தவிர நீங்கள நோயாளிகளாகவோ, அல்லது
பிரயாணத்திலோ இருந்தால்,
அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து
வந்தாலும், அல்லது நீங்கள்
பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும்
(உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால்
(தயம்மும் செய்து கொள்ளுங்கள்;. அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால்
தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக்
கொள்ளுங்கள்;.
அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க
விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள்
அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது
முழுமையாக்கவும் விரும்புகிறான்.
Tuesday, May 22, 2012
இறைவன் ஒருவரே!!
எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!!
அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.
வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.
வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
- அவர் உரை மனம் கடந்து உள்ளார்.
- நம் உயிருக்கு உயிரானவர்.
- சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாக உள்ளார்.
- கற்பனை முழுவதுங் கடந்து ஒளி தரும் ஓர் அற்புதச் சிற்சபை.
- நம்மை இன்ற நற் தாயினும் இனிய பெருந்தயவு உள்ளவர்.
- சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம்.
- தநு கரணாதிகள்(மனம் சித்தம் அகங்காரம் புத்தி) கடந்து அறியும் ஓர் அனுபவம்.
- வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும் அல்லதாய் விளங்குபவர்.
- மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிப்பவர்.
- எங்கு எங்கு இருந்து உயிரெ எது வேண்டினும் அங்க அங்கு இருந்து அருள்பவர்.
- பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய் திகழ்வது
- சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியியில் உணர்த்தியவர்
- காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரிபவர்
- மூவகை சித்தி அளிப்பவர்; கரும சித்தி யோகா சித்தி ஞான சித்தி
Friday, May 18, 2012
Maanasa bhajare
Dhusthara bhava saagara tharanam"
I
do not need your flower garlands and fruits, things that you get for an anna or
two;
they
are not genuinely yours. Give Me something that is yours.
There
are four types of persons;
The
'DEAD,' who deny the Lord and declare that they alone exist,
independent, free, self-regulating and self-directed;
The
‘SICK,' who call upon the Lord when some calamity befalls them or when
they feel temporarily deserted by the usual sources of succour;
The
'DULL,' who know that God is eternal companion and watchman, but who
remember it only off and on when the idea is potent and powerful; and lastly,
the
'HEALTHY,' who have steady faith in the Lord and who live in His
comforting creative presence always.
They
are like the iron and the magnet. But if the iron is rusty covered with layers
of dirt, the magnet is unable to attract. Remove the impediment; that is all
you have to do. Shine forth in your real nature and the Lord will draw you into
His Bosom.
Thursday, May 10, 2012
இறைவன் ஒருவரே
எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!!
அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.
வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
அவர் அருட்பெரும்ஜோதி. அவர் ஒளிவடிவினர்.
வள்ளல் பெருமான் அகவலில் சொன்னது
- அவர் உரை மனம் கடந்து உள்ளார்.
- நம் உயிருக்கு உயிரானவர்.
- சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாக உள்ளார்.
- கற்பனை முழுவதுங் கடந்து ஒளி தரும் ஓர் அற்புதச் சிற்சபை.
- நம்மை இன்ற நற் தாயினும் இனிய பெருந்தயவு உள்ளவர்.
- சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம்.
- தநு கரணாதிகள்(மனம் சித்தம் அகங்காரம் புத்தி) கடந்து அறியும் ஓர் அனுபவம்.
- வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும் அல்லதாய் விளங்குபவர்.
- மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிப்பவர்.
- எங்கு எங்கு இருந்து உயிரெ எது வேண்டினும் அங்க அங்கு இருந்து அருள்பவர்.
- பொதுவது சிறப்பது புதியது பழயது என்று அது அதுவாய் திகழ்வது
- சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியியில் உணர்த்தியவர்
- காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரிபவர்
- மூவகை சித்தி அளிப்பவர்; கரும சித்தி யோகா சித்தி ஞான சித்தி
Monday, April 16, 2012
பாரதி கண்ணன் திருவடி
பாரதி கண்ணன்/கண்ணம்மா பட்டு படித்து பாருங்கள்,
கண்ணன் கண்ணன் என்று இருக்கும்,
கிருஷ்ணன் செத்தான் என்று இருக்கும்.
இடது கண் சந்திரன் வலது கண் சூரியன் சிவவாக்கியர் சொன்னது..
.வள்ளலார் பாடல் பல இடங்களில் கண் மணியில் இருக்கும் இறைவ என்று இருக்கும்.
பட்டினத்தார் கூட கண்ணால் ஞானம் தேடு என்று சொல்லுகிறார்.
இது எல்லாம் மற்றவர்கள் அனுபவம். நமக்கு பயன் படும் என்ற கருணையோடு
எழுதி உள்ளனர்.
சித்தர்கள் மதம் ஜாதி கடந்து, இறைவன் ஒருவரே என்ற கொள்கை உடையவர்கள். ஜாதி கடந்து மதம் கடந்து இறைவனை உணர்ந்தவர்கள். அதை அடைய எளிய வழி சொல்லி உள்ளனர்.
கண்ணன் என்பது கண்ணில் இருக்கும் இருக்கும் இறைவனை குறிக்கிறது. கண்ணன் என்பது ஒரு சமய/மத பெயர் கிடையாது.
பாரதிக்கு ஒரு இலங்கையில் சித்தர் குருவாய் இருந்ததாக படித்தேன். சித்தர் வழி நடப்பவர்களுக்கு எல்லாம் கண் திருவடி என்று தெரியும். அவர்கள் ரகசியம் காக்க வேண்டியதால் இதை நேரடியாக வெளியே சொல்ல மாட்டார்கள். இந்த குழுமத்தில் இருக்கும் பலருக்கு திருவடி கண் என்று தெரியும். யாரும் சொல்லுவது இல்லை. என் குரு இதை ரகசியம் காக்காமல் வெளிப்படை சொல்லி உள்ளார்.
இது ரகசியமாய் இருந்ததே பலருக்கு தெரியாது. புத்தகத்தில் கூட இருக்காது. வெளிபடை யாய் சொல்வதால் இது பொய் என்றும் நினைகிறார்கள்.
Thursday, March 29, 2012
கண்மணி!! வள்ளலார்
வள்ளல் பெருமான் கண்மணி/இறைவன் திருவடி பற்றி பாடிய பாடல்கள்
என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
என்ன தவஞ்செய் தேன்
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில்
கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே
விதிக்கும் உலகுயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே!!
கருணை நடத்தரசே என் கண்ணிலங்கு மணியே
என்னிரு கண் காள்உமது பெருந்தவம் எப் புவனத்தில் யார்தான் செய்வர்
கண்ணுத லானை என் கண்ணமர்ந் தானைக்
என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே
காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
காட்டுகின்ற ஒளி தனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்
கண்ணே கண் மணியே கண் ஒளியே கண்ணுட்
கலந்து நின்ற கதிரே அக்கதிரின் வித்தே
கண் செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே
கண்ணுண் மணியே என் உள்ளம் புனைஅணியே
வாழ்வித்த என் கண் மணியா மருந்து நல்ல ..
கண்ணொளி காட்டு மருந்து -
என்கண் மணியே என் வருத்தந் தவிர்க்க வரும்
குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே
என்உயிர்க் குயிரே என் அறிவேஎன் அறிவூடு
இருந்தசிவ மேஎன் அன்பே
என் ஆருயிர்க்கு வாழ்வே என் கண்
மணியே என் குருவேஎன் மருந்தே இன்னும்
மாற்றரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கு
ந்தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதியே நீ
வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே
மன்னிய பொன்னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
மாமணியே என்னிரு கண் வயங்கும் ஒளி மணியே
தன்னியல் பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்
கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே
என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
என்அனுபவந் தன்னிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
தானே கலந்துமுழுதும்
மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
கண்மணி யே மணி கலந்த கண் ஒளியே
என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
கைக்கிசைந்த பொருளே என் கருத்திசைந்த கனிவே
கண்ணே என் கண்களுக்கே கலந்திசைந்த கணவா!!
கருணை நடஞ் செய்பவரே அணையவா ரீர்
கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்
கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து
சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.
5111 இறவா வரம்தரு நற்சபை யே
எனமறை புகழ்வது சிற்சபை யே. 46
5112 என்இரு கண்ணுள் இருந்தவ னே
இறவா தருளும் மருந்தவ னே. -அம்பலத்தரசே
கண்ணுதலானை
என் கண் அமர்ந் தானைக்
கருணாநிதியைக் கறைமிடற் றானை
ஒண்ணுதலாள் உமை வாழ் இடத்தானை
ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
நண்ணுதல் யார்க்கும் அருமையி னானை
நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.
Friday, March 9, 2012
ஆன்மீக சுகந்திரம்
சரியை கிரியை யோகம் ஞானம் உள்ளது. ஒரு படியில் இருக்கும் ஒருவருக்கு மற்றவருக்கும் உள்ள கருத்துக்கு சண்டை. அதை சரியாக புரிந்து கொண்டால் ok.
மந்திரங்கள் எல்லா பொய் எல்லாம் இல்லை என நம்புகிறேன். மனதை செம்மை படுத்த கண்டீப்பாக உதவும்.
நமது நாட்டில் ஆன்மீக சுகந்திரம் அதிகம். ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதுவே நம் நாட்டின் பலம். மற்ற நாட்டில் உள்ள கட்டு பாடு இங்கு இல்லை. இருந்திருந்தால் நமக்கும் ஒரே ஜீசஸ்/நபி தான் கிடைத்து இருப்பார்.
ஊருக்கு ஊர் ஜீவசமாதி பார்க்க முடிகிறது. சக்தி வாய்ந்த கோவில் பார்க்க முடிகிறது. படித்து மகிழ பல பாடல்கள். அதனால் விதி இருக்கும் என நான் நினைக்க வில்லை.
சித்தர்கள் அடைந்த நிலை மிகவும் உயர்ந்தது. மரணமில்ல பேரு வாழ்வு அடைந்தவர்கள்.
வரலாறு பற்றி பேசி பயன் இல்லை என நினைகிறேன். இங்கே ஒத்த விருப்பம் உள்ளவர்கள் கூடி உள்ளோம்.
நாம் நம்மை அறிய மிக வேகமாக செயல் படவேண்டும். நம் குறிகோளில் இருந்து விலகாமல் இருக்க சித்தர்/ஞானி பாடல்களை பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
நல்ல தகுதி இருந்தால் சித்தர்கள் வழி காட்டுவார்கள். ஒரு கண்ணாடி எவ்வளவு சுத்தமாக உள்ளதோ அந்த அளவே அதனால் ஒளியை reflect பண்ண முடியும்.
வள்ளல் பெருமான் ஞான சரியை என்ற 13 படிக்கு நேரடியாய் அழைத்து செல்கிறார். சத்தியம் செய்து கெஞ்சி அழைக்கிறார். அவர் பெற்ற அந்த பெரும் பேரை அனைவரும் பெறவேண்டும் என கருணையுடன் அழைக்கிறார். அவர் கருணையோ கருணை...எந்த ஞானியும் இப்படி சொல்லவில்லை என நினைக்கிறன் .
ஞான சரியை --> http://
போர் சண்டை கற்பழிப்பு சாதி பாகுபாடு உயிரை கொன்று தின்பது இது எல்லாம் மனிதனுக்கு பழகி விட்டது. இது எல்லாம் தவறு இல்லை. இது நமது இயல்பாகி விட்டது. எந்த திசையை நோக்கி இந்த உலகம் செல்கிறது. உலகத்தில் அனைவரும் தன்னை உணர்ந்து சந்தோசமாக இருந்தால் குற்றமா?
நம்மை உடல் அல்லது மனம் என்ற நிலையில் அடையாள படுத்தி கொள்கிறோம். எவ்வளவு பொய்யான வாழ்க்கை வாழ்கிறோம். மனம் உடல் இது இரண்டும் நம்முடையது.
இதை நாம் என நம்பி வாழ்வை கழித்து, மற்றவர்களுடன் சண்டையிட்டு, சாதி பேதம் பார்த்து வாழ்கிறோம். இது சரி என படவில்லை. பொய்யை எதார்த்தம் என கருத என்னால் முடியவில்லை.
ஆசை காமம் .... எல்லாம் நாமுள் உள்ளது, நம்மை அறிய முற்படும் போது அதுவே தடை ஆகி விடும். தன்னை அறிய இஷ்டம் இல்லை என்றால் அதை சகஜம் என அப்படியே இருக்கே வேண்டியது ஆகி விடும்.அது இயல்பு என அதை பிடித்து கொண்டால், அதிலே கிடக்க வேண்டியது தான்.நான் சொல்வது தடைகளை கடந்து செல்வது பற்றி.
Subscribe to:
Posts (Atom)

இப்பொழுது இருக்கும் சூழ் நிலையில் நீங்கள் வெளியே சென்று கொண்டு இருக்கும் போது கஷ்டம் என்றால் உதவி செய்ய ஒரு சிலரே, உங்களிடம் இருந்து பறிக்க ஒரு கூட்டம் இருக்கும். தன்னை அறிந்த சமுதாயத்தில் இந்த பிரச்னை இருக்காது.