Thursday, April 4, 2013

சபை ஐந்து



  •  



திருவாலங்காடு                               _இரத்தின  சபை
தில்லை                                               _ பொற் சபை
மதுரை                                                 _ வெள்ளி சபை
திரு நெல்வேலி                                _ தாமிர சபை
திருக்குற்றாலம்                              _ சித்திர சபை


சிதம்பரம் – கனகசபை (ஆகாயம்) (பொன்)
திருவாலங்காடு – ரத்தின சபை (ரத்தினம்) 
திருக்குற்றாலம் – சித்திர சபை (கலை)
திருநெல்வேலி – தாமிரசபை (செப்பு)
மதுரை – ரஜத சபை (வெள்ளி)


 “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், 

ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.

திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டம் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப் படுகிறது.


வெள்ளி அம்பலம் ::
உள்பிரகாரத்திலிருந்து கருவரைக்கு முன் உள்ள பாதையில் நுழைகிறோம். அதே வழியில் கடம்பத்தடி மண்டபமும், வெள்ளி அம்பலம் என்ற பெரிய மண்டபமும் இருக்கிறது. இங்கு நடராஜர் சிலை ஒன்று உள்ளது. அவர் சபாபதி என்று அழைக்கப்படுகிறார். அந்தச் சிலை வெள்ளியினால் செய்யப்பட்டது. எனவே வெள்ளியில் அம்பலத்தான் இருக்கும் இடம் வெள்ளியம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் சிவபெருமான் நடனம் புரியும் இடங்களில் மதுரை ஐந்தில் ஒன்றாகும். சுவாமி சன்னதியில் உள்ள நடராஜர் கருவரை, வெள்ளி சபை என்று அழைக்கப்படுகிறது. இது தவிற, சிதம்பரத்தில் கனகசபை, திருவாலங்காட்டில் ரத்னசபை, திருநெல்வேலியில் தாமிரசபை, குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய இடங்கள் சிவனின் நடன சபைகளாகும்.




9429) பஞ்ச சபைகள் எவை?
ரத்தின சபை, கனகசபை, ரஜிதசபை, தாமிரா சபை, சித்திரசபை
9430) ரத்தின சபை எங்குள்ளது? திருவாலங்காடு
9431) கனகசபை எங்குள்ளது? சிதம்பரம்
9432) ரஜிதசபை எங்குள்ளது? மதுரை
9433) சித்திர சபை எங்குள்ளது? திருக்குற்றாலம்
9434) வெள்ளிசபை என்று அழைப்பது எந்த சபையை? ரஜித சபையை
9435) பஞ்ச தாண்டவங்களும் எவை?ஆனந்த தாண்டவம், அஜபா, தாண்டவம் சுந்தரத் தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், பிரம்ம தாண்டவம்
9436) ஆனந்த தாண்டவ தலம் எது? சிதம்பரம் பேரூர்
9437) அஜபா தாண்டவ தலம் எது? திருவாரூர்
9438) சுந்தரத் தாண்டவம் தலம் எது? மதுரை
9439) ஊர்த்துவ தாண்டவ தலம் எது? அவிநாசி
9440) பிரம்ம தாண்டவ தலம் எது? திருமுருகன்பூண்.
9441) தில்லையில் உள்ள ஐந்து சபைகளும் எவை? சித்சபை, கனகசபை, தேவசபை, திருத்த சபை, ராஜசபை
9442) அருவம் என்பது என்ன? உருவமற்ற நிலை
9443) உருவம் என்பது என்ன? கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை
9444) அருவுருவம் என்பது என்ன? உருவமும் அருவமும் கலந்த நிலை
9445) அருவம், உருவம், அருவுருவம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக விளங்குவது எது? சிதம்பரம்
9446) உதயத்திற்கு முன் தினமும் நடைபெறும் பூஜை எது?நித்தியபூஜை
9447) விசேட கால பூஜை எது? நைமித்தி பூஜை



திருவாலங்காடு, திருப்பனந்தாள், திருச்செங்காட்டாங்குடி, தென்காசி, தாரமங்கலம் போன்ற ஊர்களிலும் ஊர்த்துவ தாண்டவ நடராஜரைக் காணலாம்.

திருக்குற்றாலத்தில் "சித்திரசபை"யில் காணப்படும் இந்தத் தாண்டவம் "திரிபுரத் தாண்டவம்" என்று அழைக்கப் படுகிறது.



வெள்ளியம்பலக் கூத்தன்: மதுரையில் ஆடியது வேறு காரணத்துக்கு எனச் சொல்லப்
படுகிறது.இது உன்மத்தத் தாண்டவம், சொக்கத் தாண்டவம், ஞானசுந்தரத்
தாண்டவம் எனவும் அழைக்கப் படும். இவ்வாறு இடக்காலைத் தூக்கி இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் கால் வலிக்குமே என வருந்தினான் மன்னன் ராஜசேகர பாண்டியன். அவன் மனம் மகிழ ஆடியது தான் "கால் மாறி ஆடிய படலம்"