Saturday, November 30, 2013

பூசணி விதை பாயசம்

பூசணி விதை பாயசம்!
தேவையானவை: பூசணி விதை – 150 கிராம், பால் – 250 மில்லி, சர்க்கரை – 75 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -’ 10 கிராம், திராட்சை – 5 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பூசணி விதையை, சிறிதளவு பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சவும். அதில் அரை டம்ளர் பாலை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள பாலில் அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போட்டு இறக்கவும். தனியாக உள்ள அரை டம்ளர் பாலை குளிர வைத்து, பாயசத்துடன் கலந்து, ஏலக்காய்தூள் தூவி, ‘ஜில்’லென்று பரிமாறவும்.காலை சாப்பாட்டுக்கு முன்பு ‘சூப்’ போல் இந்தப் பாயசத்தை பருகலாம்.

உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு’களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்ட’மின்-சி, தாது உப்புகள், பி-12, அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு’களையும் கூடவே சேர்த்துக் கொள்ள’வேண்டும். முட்டை’யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 போன்ற எல்லாச்’சத்துக்களும் அடங்கியிருக்”கின்றன. 


தாது விருத்தி தரும்
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.

பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும்.

Friday, November 22, 2013

சாமி சண்முகானந்தா

உனது வாழ்வில் எக்காரணம் கொண்டு சந்தேகம் இல்லாமல் வாழலாம்.
குரு அருள்...தங்க ஜோதி ஞான சபை சிவ செல்வராஜ் உனது பரமாத்ம குரு

ஆன்மாவை நம்பினால் சரீரம் நன்றாக இருக்கும்

சரீத்தை நம்பாதே அழியும் சரீரம். அதற்காக ஆசை பட்டு எக்காரணம் கொண்டும் சாப்பிடவேண்டாம் அழிவில்லா ஆன்மாவை தேடு

ஒருவர் மௌனம் இருவர் பேச்சு மூவர் கலகம் நால்வர் நாசம்.
உங்கள் வாழ்வில் நீயும் உன்னை சார்ந்தவரும் சுத்த சன்மார்க்கத்தில் வந்து விட்டீர்கள்.

கவலை வேண்டாம் .

- சாமி சண்முகானந்தா
ஸ்ரீ ரமண அருள் ஞான சன்மார்க்க பீடம்.
சுத்த சன்மார்க்க மௌன குடில்
NO 128 செங்கம் மெயின் ரோடு
திருவண்ணாமலை

வயசு 82
இறைவன் திருவடி அடையும் நாள் 20/4/2015
மதியம் 2 மணி 43 நிமிடம்/