Wednesday, June 22, 2016

குரங்கு

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது. பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது . குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
***
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன."ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
***
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
***
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
***
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
***
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
கவலைகளை விட்டொழியுங்கள்.

Sunday, December 29, 2013

I am free.


There is something basic in our life.. but we miss/ignore...

MY TASK IS COMPLETE

My purpose is achieved.
The entire circle of birth and death is over.
I have realized the perfect bliss of the atman.
I have known myself to be Brahman.
I am free.
I am perfect.
I am independent.
I enjoy bliss.
I enjoy the bliss of the immortal soul.
I am brimful of perennial joy.
A self-effulgent light burns in my heart.
I have broken all illusory relationships.
Now there is no husband, no wife.
Now there is no cousin and no grandfather.
It is all one homogeneous essence of bliss only.

Now my task is complete.
I am free from doubt.
I am free from delusion.
Why should I study the scriptures?
I rest in my own essential nature.
Now, where is the necessity for meditation?
I act like any other human being.
I bathe, I sleep, I sing, I work, I write, I walk, I eat and I talk. And yet, I do not perform any action at all.

swami sivananda

True life is made up of ‘now’. True life is not made up of bygone yesterdays or uncertain tomorrows. If you make this moment all that it ought to be, it will bring something improved the next moment.

- Swami Chidananda

Sunday, December 8, 2013

சென்னிமலை- பிண்ணாக்கீசர் ஜீவசமாதி

சென்னிமலை- பிண்ணாக்கீசர் ஜீவசமாதி
> காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற தெய்வீகத் திருத்தலமாக சென்னிமலை அமைத்துள்ளது ..இங்கு முருகப்பெருமான் கருணையே வடிவாய் அருள்பாலிக்கிறார் .
> இக்கோவிலில் தான் சிறப்பாக தெய்வத்திரு பாலதேவராயனால் கந்த சஷ்டி கவசம் எழுதி அரங்கேற்றம் செய்யப்பட்டது ..மூல கருவறையில் முருக பெருமான் அருள் செய்ய அவர் பின்புறம் தனி சன்னதி கொண்டு வள்ளி தெய்வானை காட்சி தருகிறார்கள் ..
> அதற்கும் சற்று மேலே 18 சித்தர்களின் ஒருவரான பிண்ணாக்கீசர் ஜீவசமாதி கொண்டுள்ளார் இங்கே இவர்க்கு தன்னாசியப்பர் என்ற நாமமும் உள்ளது ..( பிண்ணாக்கீசர்-பின் நாக்கு -பிளவு பட்ட நாக்கு -பிளவு பட்ட நாக்கினால் யோக சித்தி பெற்றவர் )
> இங்கிருத்து பழனி வரை செல்லும் சுரங்க பாதை ஒன்று உள்ளது..காண கண் கோடி வேண்டும் ..ஒரு முறை சென்று வாருங்கள்
 
> பிண்ணாக்கீசர் ஜீவ சமாதிக்கு அருகே சரவணமுனிவர் எனும் முனிவரின் சமாதியும் உள்ளது ..இயற்கை மலை அழகு காண காண மனதில் மகிழ்ச்சியும் , அருமையான தெய்வீக அனுபவங்களைப் பெறலாம் ..ஒருமுறை வந்து பாருங்கள் ...

Saturday, November 30, 2013

பூசணி விதை பாயசம்

பூசணி விதை பாயசம்!
தேவையானவை: பூசணி விதை – 150 கிராம், பால் – 250 மில்லி, சர்க்கரை – 75 கிராம், நெய் – 2 டேபிள்ஸ்பூன், முந்திரி -’ 10 கிராம், திராட்சை – 5 கிராம், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை: பூசணி விதையை, சிறிதளவு பாலில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலைக் காய்ச்சவும். அதில் அரை டம்ளர் பாலை தனியாக வைத்துவிட்டு, மீதமுள்ள பாலில் அரைத்த விழுதைப் போட்டு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து போட்டு இறக்கவும். தனியாக உள்ள அரை டம்ளர் பாலை குளிர வைத்து, பாயசத்துடன் கலந்து, ஏலக்காய்தூள் தூவி, ‘ஜில்’லென்று பரிமாறவும்.காலை சாப்பாட்டுக்கு முன்பு ‘சூப்’ போல் இந்தப் பாயசத்தை பருகலாம்.

உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை உற்பத்தி செய்ய புரதம், இரும்புச்சத்து மிகவும் அவசியம். புரதச்சத்து உணவு’களான பால், பருப்பு, பயறு வகைகள், பழங்கள், பேரீச்சம்பழம், கீரை வகைகளை தினமும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது, அந்தச் சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ள, வைட்ட’மின்-சி, தாது உப்புகள், பி-12, அமிலத்தன்மை, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவு’களையும் கூடவே சேர்த்துக் கொள்ள’வேண்டும். முட்டை’யின் மஞ்சள் கருவில் இரும்பு, புரதம், ஃபோலிக் ஆசிட், பி.12 போன்ற எல்லாச்’சத்துக்களும் அடங்கியிருக்”கின்றன. 


தாது விருத்தி தரும்
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.

பூசணி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் நீங்கும்.

Friday, November 22, 2013

சாமி சண்முகானந்தா

உனது வாழ்வில் எக்காரணம் கொண்டு சந்தேகம் இல்லாமல் வாழலாம்.
குரு அருள்...தங்க ஜோதி ஞான சபை சிவ செல்வராஜ் உனது பரமாத்ம குரு

ஆன்மாவை நம்பினால் சரீரம் நன்றாக இருக்கும்

சரீத்தை நம்பாதே அழியும் சரீரம். அதற்காக ஆசை பட்டு எக்காரணம் கொண்டும் சாப்பிடவேண்டாம் அழிவில்லா ஆன்மாவை தேடு

ஒருவர் மௌனம் இருவர் பேச்சு மூவர் கலகம் நால்வர் நாசம்.
உங்கள் வாழ்வில் நீயும் உன்னை சார்ந்தவரும் சுத்த சன்மார்க்கத்தில் வந்து விட்டீர்கள்.

கவலை வேண்டாம் .

- சாமி சண்முகானந்தா
ஸ்ரீ ரமண அருள் ஞான சன்மார்க்க பீடம்.
சுத்த சன்மார்க்க மௌன குடில்
NO 128 செங்கம் மெயின் ரோடு
திருவண்ணாமலை

வயசு 82
இறைவன் திருவடி அடையும் நாள் 20/4/2015
மதியம் 2 மணி 43 நிமிடம்/

Thursday, August 1, 2013

Thiruvadi davam - Hindi

अरुट- पेरुन-जोती अरुट-पेरुन-जोती                        तनी पेरुम करुनै अरुट-पेरुन-जोती 

भगवान एक है, यह  संसार का केवल एक ही परमेश्वर है!

ईश्वर सृजन  के  लिए ब्रम्हा ,  रखरखाव  के  लिए विष्णु  एवं  विनाश के लिए शिव के  रूप में जाने  जाते है !

भगवान दिव्य (अललोकीक )प्रकाश के रूप में हर सिद्ध और संतों के समक्ष प्रकट होते हैं !

वदलुर रामालिंगा  वल्ललार ने अरुत्पेरुन्ज्योठी (भगवान की  कृपादृष्टि के रूप में इसे बताया है! 

भगवान हम में  आत्मा /  दिव्य प्रकाश के रूप में मौजूद है
!
हमारे जीवन का  उद्देश्य को  खुदको (आत्मा ) पाना  है!

भगवान के पवित्र चरणों (आत्मा के लिए) का प्रवेश बिंदु आँखों की पुतली है! 

कर्म के कारण हम स्वयं (आत्मा) का एहसास करने में सक्षम नहीं हैं!

हम पिता / माता / शिक्षक / किताबों / दोस्तों  से जीवन की मूलभूत ज्ञान  सीखते हैं! 

उसी तरह अध्यात्मिक ज्ञान क लिए हमे किसी सिद्ध व्यक्ति की जरूरत  होती है वो हमें गुरु के रूप में मिलते हैं! तपस्या  हमें खुली आंखो  से करना चाहिए!

मोक्ष की प्राप्ति  भौतिक घ्यान से नहीं अपितु भगवन के  समर्पण भाव अर्थात पवित्र चरणों (आँखों की पुतली) से मिलती है  और यही तपस्या है!

गुरु से दीक्षा , आशीर्वाद एवं तपस्या  से कर्मभाव पवित्र  हो जाते हैं 7200  नाडी एवं 1008  कमल पत्ती खिल कर पवित्र हो जायेंगे

अमुत्य को वा
लै  (सभी आत्माओं की मां) की कृपादृष्टि से प्राप्त किया जा सकता है । 

प्रबोधन(मुक्ति/ मोक्ष )  पाने के लिए सभी सिद्ध और संतो  ने तपस्या(थिरुवडी दवम का मार्ग अपनाया  है!

अनुशासन: मांस ,शराब एवं धूम्रपान का त्याग से ही इस प्रबोधन को पाया जा सकता है !

तांगा जोती ज्ञान  सबै - कन्‍याकुमारी                           तमिलनाडु इंडिया 

Monday, July 22, 2013

வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார்

வள்ளல் பெருமான் அனுபவம் எப்படி ஞானம் பெற்றார் இறைவனை அடைந்தார் என சொல்லும் பாடல். தவறு இருந்தால் மன்னிக்கவும். இது எனக்கு புரிந்தது மற்றும் அனுபவ பெற்றவர்கள் உதவியுடன் எழுதியது
ஜோதி மலை என்பது - உட்புகு வாசல் . திருவடி
வீதி - மயிர் பாலம்
1008 இதழ் தாமரை அனுபவம்
பத்தாவது வாசல் திறந்து(தலை உச்சி) மேல் சென்று
சத்தர்கள் சத்திகள் காண்கிறார்
பிறகு ஐவரை காண்கிறார்
பிறகு தாயை கண்டு அருள்/அமுதம் பெற்ற பின்னரே தந்தையை காண்கிறார்
நடராஜர் சந்நிதி - அருட்பெருஞ்சோதி காண்கிறார்

ஆணிப்(?) பொன்(தங்க) அம்பல(கோயில்) கண்ட காட்சிகள்:
1. ஜோதி மலை (
2 ஒரு வீதி - வீதியில் சென்றேன்
3 வீதி நடு ஒரு மேடை (மேடைமேல் ஏறினேன்)
4. அங்கொரு கூடம்
5 கூடமேல் ஏழ் நிலை மாடம் இருந்ததடி
6 ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம்
ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம் ஆக வந் தார்கள டி
7 மணிமுடி கண்டேன டி
8 மணிமுடி மேலோர் கொடுமுடி நின்றது
9 கொடுமுடி மேல் ஆயிரத்தெட்டு மாற்றுப்பொற் கோயில்
(1008 petal lotus - brain - you can see in any temple)
10 கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் கூசாது
சென்றன டி(10 th gate)
11 கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் கோடி பல் கோடிய டி
12 அப்பாலே சென்றேன் அங்கோர் திரு வாயிலில் ஐவர் இருந்தாரடி
(படைத்தல்-காத்தல்-அழித்தல் -மாயையில் மறைத்தல்-அருளல்)
13 மேலோர் மணிவாயில் உற்றேன டி
14 எண்ணும் அவ்வாயிலில் பெண்ணோ டாணாக
இருவர் இருந்தாரடி - (அர்த்தனரீஸ்வரர்)

15 அத்திருவாயிலில் ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாள டி

16 அம்மையைக் கண்டேன் அவளருள் கொண்டேன் அமுதமும்
உண்டேன டி - சித்தர்கள் போற்றும் வாலை .. ஆதி சக்தி )

17 தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேன டி
இதை தான் (வாலை) தாயின் அருள் இல்லாமல் தந்தையை காண
முடியாது என சொல்வது.

18 சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறது சாமி அறிவாரடி

http://thiruarutpa.vallalar.org/LyricsPage.aspx?pathigamid=6109