Thursday, March 29, 2012

கண்மணி!! வள்ளலார்வள்ளல் பெருமான் கண்மணி/இறைவன் திருவடி பற்றி பாடிய பாடல்கள்


என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
என்ன தவஞ்செய் தேன்  கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில்
கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே
விதிக்கும் உலகுயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே!!

 
கருணை நடத்தரசே என் கண்ணிலங்கு மணியே

 என்னிரு கண் காள்உமது பெருந்தவம் எப் புவனத்தில் யார்தான் செய்வர்

 கண்ணுத லானை என் கண்ணமர்ந் தானைக்

என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே

கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணிற் கருமணியே

காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க்
காட்டுகின்ற ஒளி தனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய்

கண்ணே கண் மணியே கண் ஒளியே கண்ணுட்
கலந்து நின்ற கதிரே அக்கதிரின் வித்தே

கண் செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே

கண்ணுண் மணியே என் உள்ளம் புனைஅணியே

வாழ்வித்த என் கண் மணியா மருந்து நல்ல ..
கண்ணொளி காட்டு மருந்து -

என்கண் மணியே என் வருத்தந் தவிர்க்க வரும்
குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே

எனது  கண்ணே என் இரு கண்  இலங்கு மணியே என் உயிரே
என்உயிர்க் குயிரே என் அறிவேஎன் அறிவூடு
இருந்தசிவ மேஎன் அன்பே


என் ஆருயிர்க்கு வாழ்வே என் கண்
மணியே என் குருவேஎன் மருந்தே இன்னும்

மாற்றரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கு
ந்தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழுந்தேனே சோதியே நீ


வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே


மன்னிய பொன்னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
மாமணியே என்னிரு கண் வயங்கும் ஒளி மணியே
தன்னியல் பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே


கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய்
கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே

என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
என்அனுபவந் தன்னிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
தானே கலந்துமுழுதும்

மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே

கண்மணி யே மணி கலந்த கண் ஒளியே

என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
கைக்கிசைந்த பொருளே என் கருத்திசைந்த கனிவே
கண்ணே என் கண்களுக்கே கலந்திசைந்த கணவா!!


கருணை நடஞ் செய்பவரே அணையவா ரீர்
கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்
கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி 

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து

சிவகாம வல்லியைச் சேர்ந்தவ னே
சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவ னே.  
 5111     இறவா வரம்தரு நற்சபை யே
எனமறை புகழ்வது சிற்சபை யே.     46
5112     என்இரு கண்ணுள் இருந்தவ னே
இறவா தருளும் மருந்தவ னே.     -அம்பலத்தரசே


கண்ணுதலானை
என் கண் அமர்ந் தானைக்
கருணாநிதியைக் கறைமிடற் றானை
ஒண்ணுதலாள் உமை வாழ் இடத்தானை
ஒருவனை ஒப்பிலா உத்தமன் தன்னை
நண்ணுதல் யார்க்கும் அருமையி னானை
நாதனை எல்லார்க்கும் நல்லவன் தன்னை
எண்ணுதல் செய்தெனக் கின்பளித் தானை
இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே.

Friday, March 9, 2012

ஆன்மீக சுகந்திரம்


சரியை கிரியை யோகம் ஞானம் உள்ளது. ஒரு படியில் இருக்கும் ஒருவருக்கு மற்றவருக்கும் உள்ள கருத்துக்கு சண்டை. அதை சரியாக புரிந்து கொண்டால் ok. 

மந்திரங்கள் எல்லா பொய் எல்லாம் இல்லை என நம்புகிறேன். மனதை செம்மை படுத்த கண்டீப்பாக உதவும்.

நமது நாட்டில் ஆன்மீக சுகந்திரம் அதிகம். ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அதுவே நம் நாட்டின் பலம். மற்ற நாட்டில் உள்ள கட்டு பாடு இங்கு இல்லை. இருந்திருந்தால் நமக்கும் ஒரே ஜீசஸ்/நபி தான் கிடைத்து இருப்பார். 

ஊருக்கு ஊர் ஜீவசமாதி பார்க்க முடிகிறது. சக்தி வாய்ந்த கோவில் பார்க்க முடிகிறது. படித்து மகிழ பல பாடல்கள். அதனால் விதி இருக்கும் என நான் நினைக்க வில்லை. 

சித்தர்கள் அடைந்த நிலை மிகவும் உயர்ந்தது. மரணமில்ல பேரு வாழ்வு அடைந்தவர்கள். 

வரலாறு பற்றி பேசி பயன் இல்லை என நினைகிறேன். இங்கே ஒத்த விருப்பம் உள்ளவர்கள் கூடி உள்ளோம்.

நாம் நம்மை அறிய மிக வேகமாக செயல் படவேண்டும். நம் குறிகோளில் இருந்து விலகாமல் இருக்க சித்தர்/ஞானி பாடல்களை பயன் படுத்தி கொள்ள வேண்டும். 

நல்ல தகுதி இருந்தால் சித்தர்கள் வழி காட்டுவார்கள். ஒரு கண்ணாடி எவ்வளவு சுத்தமாக உள்ளதோ அந்த அளவே அதனால் ஒளியை reflect பண்ண முடியும்.


வள்ளல் பெருமான் ஞான சரியை என்ற 13 படிக்கு நேரடியாய் அழைத்து செல்கிறார். சத்தியம் செய்து கெஞ்சி அழைக்கிறார். அவர் பெற்ற அந்த பெரும் பேரை அனைவரும் பெறவேண்டும் என கருணையுடன் அழைக்கிறார். அவர் கருணையோ கருணை...எந்த ஞானியும் இப்படி சொல்லவில்லை என நினைக்கிறன் .


ஞான சரியை --> http://sagakalvi.blogspot.in/2011/03/blog-post.html

போர் சண்டை கற்பழிப்பு சாதி பாகுபாடு உயிரை கொன்று தின்பது இது எல்லாம் மனிதனுக்கு பழகி விட்டது. இது எல்லாம் தவறு இல்லை. இது நமது இயல்பாகி விட்டது. எந்த திசையை நோக்கி இந்த உலகம் செல்கிறது. உலகத்தில் அனைவரும் தன்னை உணர்ந்து சந்தோசமாக இருந்தால் குற்றமா?  


நம்மை உடல் அல்லது மனம் என்ற நிலையில் அடையாள படுத்தி கொள்கிறோம். எவ்வளவு பொய்யான வாழ்க்கை வாழ்கிறோம். மனம் உடல் இது இரண்டும் நம்முடையது.

இதை நாம் என நம்பி வாழ்வை கழித்து, மற்றவர்களுடன் சண்டையிட்டு, சாதி பேதம் பார்த்து வாழ்கிறோம். இது சரி என படவில்லை. பொய்யை எதார்த்தம் என கருத என்னால் முடியவில்லை.
  


எல்லோரும் தன்னை உணர்ந்து வேலை செய்தால், பொறமை, கொலை .... இருக்காது . இங்கு அனைவரும் ஒன்று என்ற நிலை இருந்தால், யாரும் யர்ருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். சமுதாயம் இன்னும் நல்ல நிலையில் இருக்கும். என் குரு சிவசெல்வராஜ் அய்யா சொல்லி கொடுக்கும் தவம் "சும்மா இரு" என்பது தான். கண்ணில் உணர்வுடன் வேலை செய்து கொண்டு இருப்பது தான். நம்மை கெடுக்கும் டிவி நாடகம் கிரிக்கெட் ... தவிர்த்து .. நேரங்களை தவத்துக்கு உபயோக படுத்தலாம்.

இப்பொழுது இருக்கும் சூழ் நிலையில் நீங்கள் வெளியே சென்று கொண்டு இருக்கும் போது கஷ்டம் என்றால் உதவி செய்ய ஒரு சிலரே, உங்களிடம் இருந்து பறிக்க ஒரு கூட்டம் இருக்கும். தன்னை அறிந்த சமுதாயத்தில் இந்த பிரச்னை இருக்காது.
 

ஆசை காமம் .... எல்லாம் நாமுள் உள்ளது, நம்மை அறிய முற்படும் போது அதுவே தடை ஆகி விடும். தன்னை அறிய இஷ்டம் இல்லை என்றால் அதை சகஜம் என அப்படியே இருக்கே வேண்டியது ஆகி விடும்.அது இயல்பு என அதை பிடித்து கொண்டால், அதிலே கிடக்க வேண்டியது தான்.நான் சொல்வது தடைகளை கடந்து செல்வது பற்றி.

குருவுக்கு செய்யும் மரியாதைநான் குருவுக்கு செய்யும் மரியாதை அவர் சொல்லுவதை(his teachings) செயல் படுத்துவதில் காண்பிப்பேன். அவர்களை புகழ விரும்பியது இல்லை.

இங்கு நல்ல விசயம் உள்ளது(if i like/made change in me) ... என்று என் எல்லா நண்பரிடமும் சொல்வேன்.. இது மார்க்கெட்டிங் அல்ல... நான் சொல்லும் போது நண்பருக்கு பயன் படும். அப்படி இல்லை என்றால் நண்பர் அவர் நண்பருக்கு தேவை பட்டால் சொல்லுவார்... இன்றைய காலத்தில் எளிதாக கெட்ட பழக்கங்களில் அடித்து செல்ல படலாம். இது மாதிரி கருத்து பார்க்கும் போது ஒரு நல்ல விஷயம் உள்ளது... இதை முயல்வோம் என ஒருவரின் வாழ்க்கை மாறலாம். எனக்கும் ஒரு சில குரு செய்வது பிடிக்காமல்(அவர் தவறாக இருக்கலாம், நாம் அதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம்) இருக்கும்..அதை விட்டு விட்டு அவர் பயிற்சி மட்டும் செய்வேன்..

ஒரு வேண்டு கொள்.. குருவே வேண்டாம் என முடிவு எடுத்து விடவேண்டாம். நாம் உலகில் கற்றது அடுத்தவர் சொன்னது. open mind ஆ இருங்கள்... உங்கள் மன நிலை மாறலாம்.. mind close பண்ணிவிட்டால் நீங்கள் நினைத்தால் கூட சரி செய்வது கஷ்டம்..  
நானும்  பல குருவை சந்தித்து உள்ளேன். எல்லா இடத்திலும்
முன்னேற்றம் மட்டுமே. ஒருவரிடன் செல்லும் முன் நமக்கு என்ன தேவை
அதை அவர் செய்கிரார என்று படித்து விட்டு செல்வேன். நீங்களும் அப்படி
முயன்று பாருங்கள்.


Thursday, March 8, 2012

வள்ளலார் என்ன தவம் செய்தார்?

வள்ளலார் என்ன தவம் செய்தார் நமக்கு என்ன தவத்தை அருளினார்?

-அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி-

Facebook இல் நடந்த  விவாதம்  .. அதில் வந்த கருத்துக்கள்  சில  இங்கே ..

வள்ளல் பெருமான் பாடலில் இருந்து சான்று.

என் கண் மணியுள் இருக்கும் தலைவ
நின்னைக் காணவே என்ன தவஞ்செய் தேன் - மெய்யருள்வியப்பு(வள்ளலார் )

நினைந்து நினைந்துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந் தன்பே
நிறைந்து நிறைந்தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு  
நனைந்துநனைந் தருளமுதே ----- ஞான சரியை

நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் - அம்மை திருப்பதிகம்"(வள்ளலார் )

திருச்சிற்றம் பலத்தின்பத் திரு உருக் கொண்டருளாம் திருநடஞ்
செய்தருளுகின்ற திருவடிகள் இரண்டும் ... திருவடிப் பெருமை

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் -
நண்ணாய் கேள் பார்க்க வேண்டும்தனையும்
பத்தரை மாற்றுத்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்.-பட்டினத்தார்

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான் என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான் என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து - சுத்த சிவநிலை(வள்ளலார் )


கண் என்பதற்கு வள்ளலார் தவிர மற்றவர் சொன்னது
1) கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ - சிவவாக்கியர்
2) என் கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காணவே என்ன தவஞ்செய் தேன் - மெய்யருள் வியப்பு(வள்ளலார் )

3) எங்கண்ணிற் பாவையன்றோ ? - கண்ணம்மா !(பாரதியார்)
4) கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் - கந்த குரு கவசம்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்ல கேள்வி. நாம் திருவருட்பா, அகவல், திருமந்திரம், திருவாசகம், போகர் சப்தகாண்டம், சிவவாக்கியர் பாடல், மற்றும் எண்ணிறைந்த சித்தர்கள் பாடல்களை படித்தீர்களானால் வள்ளலார் மட்டும் அல்ல எல்லா மகான்களும்  என்ன தவம் செய்தார்கள் என்று விளங்கும்.

ஆனால் இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்கு பக்குவம் இல்லையெனில் நல்லதொரு சற்குருவய் நாடி செல்வது நலம். ஏனென்றால் பள்ளி படிப்பில் இருக்கும் போது என்ன செய்வோம் நமக்கு வரும் சந்தேகத்தை தெரிந்த ஆசிரியரிடம் இருந்து தான் கற்று தெரிந்து கொள்வோம். அது போல தான் சித்தர்களின் பாடல்களும் அதன் விளக்கங்களும்.

இங்கே வாசியோகம் பற்றி ஒருவர் சொல்கிறார். வாசியைப் பற்றி வள்ளலாரும், திருமூலரும், போகரும் என்ன என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் சொல்லும் மூச்சை பிடிக்கவேண்டும் என்பது அல்ல.

நாம் சிந்திக்க வேண்டும் சிந்தித்து பொருள் காண வேண்டும். விவாதத்தினால் மெய்ப்பொருளை காண முடியாது.  அனுபவத்தில் மட்டுமே முடியும்.

நம்மவர்கள் தான் அறியாமையால் நாத்திகவாதம் பேசுகிறார்கள் மூடநம்பிக்கை என்று சாடுகிறார்கள். உனக்கு புரியவில்லை என்றால் இல்லை என்றாகிவிடுமா? உண்மை உணரும் அறிவு உன்னிடம் இல்லாததால் நாத்திகம் பேசுகிறாய்! நரேந்திரன் கடவுள் எங்கே காட்ட முடியுமா என ராமகிருஷ்ணரிடம் கேட்டார்.  அவர் உணரச் செய்தார்! நரேந்திரன் சுவாமி விவேகானந்தரானார். ராமகிருஷ்ணர் பரமஹம்ஸரானார்!

கேள்விகேள் - கேட்க வேண்டியதுதான். தகுந்தவரிடம் கேள். புரியவில்லையா, உன்னிடமே நீ கேள்! சாக்ரடீஸ் சொன்னாரே, உன்னையே நீ எண்ணிப்பார் என்று! இதைத்தான் வள்ளலாரும் பாடினார்.
தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என வெண்ணிலாவிடம் கேட்கிறார். சூரியனிடம் கேட்கவில்லை. ஆன்மீகவாதிகளே சிந்திக்க வேண்டியம் இடம் இது!?

நரேந்திரன் கேள்விக்கு பதில் தந்தார் நல்ல ஒரு குரு! இன்று ஏன் நாத்திகம் பேசுகிறவர் பெருகியிருக்கின்றனர் என்றால் நல்ல ஆன்மீக குரு இல்லாமையால்தான்!? இருக்கின்றவர்கள் இரகசியம் இரகசியம் என்று
இல்லாமலாக்குகின்றனர்
"துறை இது வழி இது நீ செயும் முறை இது என மொழிந்த அருட்பெரும்ஜோதி" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் சுட்டிக்காட்டிய வழி - விழி வழியை நமது ஞானிகள் - சித்தர்கள் எல்லோரும் சுட்டிக்காட்டியதும் இதுவேதான்!

"சூடு கொண்ட திரு ஆடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே" என அகத்தியர் திருவாகிய இறைவன் ஜோதியாக ஆடும் துறைமுகம் எது என அழகாக கூறுகிறார். துறை முகத்தின் கண்ணேயுள! இதில் என்ன, மறைத்தா சொல்லியிருக்கிறார்? எவ்வளவு ஆணித்தரமாக, இலகுவாக உண்மையை கூறியிருக்கிறார்! சற்று சிந்தியுங்கள். சிந்தித்தவனுக்கே சித்திக்கும்!!

எல்லா ஞானிகள் பாடல்களையும் பொருள் கொள்ள வேண்டும். ஞானிகள் பாடல்களை படித்து உணர்வதற்கு பெரிய படிப்பு ஒன்றும் தேவையில்லை. பக்தியும், இறைவனை அடைய வேண்டும் என்ற ஆவலும் இருந்தாலே போதுமானது. கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவர் தாள் (திருத்தாள் - திருவடி - இருகண்கள்) வணங்கி என மாணிக்கவாசகப் பெருமான் பாடுகிறார்.'

முதலில் இறைவன் அண்டத்திலுள்ளதைப் போல பிண்டத்திலும் கோயில் கொண்டுள்ளான் என்றும், தலையில் ஐந்து பூதங்களும் ஒருங்கே அமையப் பெற்ற கண்களில் ஒளியாக சீவனாக உள்ளான் என்றும் அறிய வேண்டும். சந்தேகமே இருக்கக்கூடாது. சந்தேக நிவர்த்தியே சுருதி உபதேசம்.

தியானம் செய்வது, ஆரம்பத்தில் ஏதாவது ஒரு உருவத்தை பார்த்து இருந்து செய்யவேண்டும். உருவம் என்றால் தெய்வத் திருஉருவங்களுக்கு போய்விடாதீர்கள். எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜோதியை வைத்துக் கொள்க. ஒருவிளக்கு ஏற்றிவைத்து அதன்முன் அமர்ந்து கண்களை திறந்து அந்த ஜோதியையே பார்த்து கொண்டிருக்க வேண்டும். சிலகாலம் அப்படியே இருந்து பழகிப்பழகி வரவர நாம்பார்க்கின்ற ஜோதியில் பலவித மாறுதல்கள் உண்டாகும். ஒரு நிலையில் ஒன்றுமே தெரியாமல் கூடபோகும். உங்கள் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டும். அப்போது ஆடாதீர்! அசையாதீர்! வேறொன்றை நாடாதீர்!

அதன்பிறகு உங்களுக்கு பற்பல காட்சிகள் அனுபவங்கள் ஏற்படும். சற்குரு வழிகாட்டுவார். இதுவே ஞானத்தில் சரியை என்ற 13-வது படிநிலையாகும். இவ்வாறு பயிற்சி செய்து அனுபவபட்டால் பின்னர் விளக்கு ஏற்றிவைக்க வேண்டியதுமில்லை. எந்த இடத்திலிருந்தும் கண்களை திறந்து இருந்து தியானம் செய்யலாம்! அதுவே முக்திக்கு வழி.

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் எப்படி தியானம் செய்தார் என அறிய வேண்டாமா? தன்னுடைய 9 வயதில் தன் வீட்டின் மாடியிலுள்ள ஒரு அறையில் சுவரில் கீழே ஒரு நிலை கண்ணாடியை வைத்து அதன் முன்னர் ஒருவிளக்கை ஏற்றி அதன்முன்னர் இருந்து பார்த்து தியானம் செய்தார். சுவரில் இருக்கும் கண்ணாடியில் தன் உருவமும் தன் கண்ணில் விளக்கின் ஒளியும் கண்டு தியானம் செய்தார்.

சில நாட்களிலே தன் "கண்" ஆடியிலே ஆறுஜோதிகொண்ட ஜோதிதரிசனம் பெற்றார். இதைத்தான், சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் . . . என் கண் உற்றதே என பாடியருளினார். ஞான அனுபவ நிலை! சிந்திப்பவர்க்கே சிவம்! காணலாம் கண்ணிலே! கண்ணாலே காணலாம்! மிகமிக உயர்ந்த ஞான நிலை இதுவே.

இதை அறிந்தவன் பாக்கியவான்! இதை அனுஷ்டித்தவன் புண்ணியவான்! இதை அனுபவித்தவனே ஞானவான்!


போகர் சப்தகாண்டத்தில் இருந்து ஒரு பாடல்:

வார்த்தையால் தாக்கக்தால் ஒன்றுமில்லை வல்லமையால் ஐம்புலனை அடுத்துக்கட்டி ஆர்த்தையால் அக்கரத்தை “விழிரெண்டில்வைத்து” அறிவான மனந்தன்னை அதற்குள்மாட்டி தேர்த்தையால் தேசிஎன்ற குதிரைதன்னை சிக்கெனவாய் சிங்கென்று கடிவாளம் பூட்டி மூர்த்தையால் மூலத்தில் மறிந்துகட்டி முனையான சுழினை விட்டு மூட்டில்பாரே

சுழி என்றால் = வட்டம் என்று ஒரு பொருள் உண்டு பூஜ்யம் என்றும் சொல்வார்கள். நம் கண் வட்டமாக உள்ளதா அதன் முனை கண்மணி தானே - இதைத்தான் சுழி முனை என்றார்கள்.

"வட்டவிழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக் கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம்” – பத்தரகிரியார் [மெய்ஞ்ஞானப் புலம்பல்]

"கண்ணே கண்மணியே கண்ஒளியே கண்ணுட் கலந்து நின்ற கதிரே அக்கதிரின் வித்தே” – திருவருட்பா 2096

என் இரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி” – திருவருட்பா 550

"கண்ணினால் உனது கழற்புதம் காணும் கருத்தினை மறந்து” – திருவருட்பா 1049

சொல் ஆர்ந்த விண்மணியை என் உயிரை என் மெய்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது” - திருவருட்பா 1278

"கண்ணே அக்கண்ணின்மணியே மணியில் கலந்தொளிசெய் விண்ணே” – திருவருட்பா 1392

"காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுக்
கனலெழுப்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்" - அகத்தியர் . தவ அனுபவத்தில் கண்ணில் கடுப்புத் தோன்றும்

கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்துருகி
யாடுமடா ஞானம் முதற்றே" என்கிறார் அகத்தியர்.

கணபதியை - கண்ணான கணபதி என்கிறார். கணபதி எப்படி கண் ஆகும்? கணபதி என்றால் கணங்களுக்கு அதிபதி. நமது கண்ணில் ஐந்து பூதகண அம்சமும் உள்ளதல்லவா? அங்கே ஒளியாக-பதியாகிய இறைவன் உள்ளானல்லவா? நம் கண்ணில் பதி உள்ளதல்லவா? கண்-பதி கணபதி என்றாயிற்று.

ஐந்து பூதகனங்களும் அதன் தலைவனும் கண்ணிலே இருக்கிறான். பதி-எனவேதான் கணபதி என்கின்றனர் -அகத்தியர்.

அதனால் தான் கண்ணான கணபதி என்றார். இந்த கணபதியை வெளியே அரச மரத்தடியில் பார்க்கச் சொல்லவில்லை. கண்ணில் தான் காணச் சொல்கிறார். அதன் மூலம் அமுதம் கிடைக்கப் பெறும் என்றும் ஞானம் என்றும் கூறுகிறார்.


தோணிபோல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் - என்று அகத்தியர் மக்களிடம் ஒருவருக்கும் சொல்லாதீர்கள் நீங்கள் அறிந்து உணருங்கள் என -எல்லோருக்கும் சொல்கிறார். இறைவன் இருக்கும் இடம்-வீடு-நம் உடலில் தோணிபோல் காணும் என்கிறார். நமது கண் தோணிபோல தானே இருக்கிறது? இந்தத் தோணியேதான் இறைவன்-ஜீவன் குடுயிருக்கும் வீடு.

சீர்காழி ஊரில் குடி கொண்டிருக்கும் சிவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் இதனால் தான் வழங்குகிறது. தோணி போன்ற கண்ணிலே இருக்கிறார் சிவம் ஆகிய ஒளி. புரிந்து கொள்க, உணர்த்து கொள்க.

சிந்தித்து தெளிவு பெறுவோம். அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க வளமுடன்.

Mathi Vanan - https://www.facebook.com/profile.php?id=100000500197062
----------------------------------------------------------------------------------------------------------------
அருட்பெரும்ஜோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
என்னிதய கமலத்தே இருந்தருளுந்த் தெய்வம்
எண்ணிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
தூண்டாத மணி விளக்காய் துலங்குகின்ற தெய்வம்
சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம் - திருவருட்பா 3910

இதற்கு பொருள் கூறுங்கள் என் இரண்டு கண்மணிகள் இலங்குகின்ற தெய்வம் என்று சொல்கிறார்.  அப்படி பார்த்தால் கண்ணின் வழியாக தான் தவம் செய்ய வேண்டுமா?

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு என்று வள்ளுவர் அய்யா சொல்லுகிறார். கண்ணும் நீ மணியும் நீ கண்ணில் ஆடும் பாவை நீ எண்ணும் நீ எழுதும் நீ என்று ஒரு மகான் பாடுகிறார்.

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே


மதிவாணன் அவர்களின் விளக்கம் சற்று சிந்திக்கவே வைத்து விட்டது. நன்றி
மதிவாணன் சொல்வதில் ஏதேனும் உங்களுக்கு சங்கேதம் ஏதும் உள்ளதா? மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம். அதே போல் ஏன் இரண்டு மூன்று பேரை தவிர வேறு யாரும் இடுக்கை இட வில்லை ? ஒரு வேலை எல்லோரும் தெரிந்து இருந்தும் பதிவு இடுவதற்கு தயக்கமா? இல்லை ரகசியாமா?

-Surya Chandra


இறைவன் திருவடி நம் கண்கள்

Wednesday, March 7, 2012

அனுபவம் 1

தன்னை உணர உள்ளே தேடவேண்டும்.. அதுவரை இறைவன் ஒரு கற்பனை பொருளே... தன்னை அறிந்த பின் இறைவனை அறியலாம்... நாம் பிறந்த நாள் முதல் நமக்கு எல்லாம் சொல்லி கொடுத்தது மற்றவர். அப்பா அம்மா இவர் தான் என்று நமக்குத் தெரியாது. அது மற்றவர் சொல்லி தான் தெரியும்(குழந்தையாக இருக்கும் போது இருந்து) இப்படி உலகில் கற்றது எல்லாம் மற்றவர் சொல்லி தெரிய வந்தது. அப்பா அம்மா ஆசிரியர் புத்தகம்
 ...... அப்படி பார்த்தல் நமக்கு ஒன்றுமே தெரியாதே! ஒன்றுமே தெரியாத நமக்கு உள்ளிருக்கும் நம்மை அறிவது மட்டும் எப்படி சாத்தியம். அதனால் நமக்கு ஒரு குரு தேவை.மாதா பிதா குரு தெய்வம்... மாதா பிதா அனைவருக்கும் உண்டு... குருவை கொண்டு இறையை அறிய வேண்டும்....

நீங்கள் சொல்வது சரி. கும்பிட்டே வாழ்வை கழித்து விட கூடாது. ஆனால் குரு இன்றி திரு அருள் இல்லை.இந்த பதிவு பாருங்கள்
http://sagakalvi.blogspot.in/2011/12/blog-post_21.htmlயாரையும் புண் படுத்த சொல்ல வில்லை. புத்தர் ஆன்மீகத்தில் பெரிய நிலை அடைய வில்லை என்று வள்ளல் பெருமான் சொல்லி உள்ளார். இதே கருத்து திருவாசகத்தில் குறிப்பு உள்ளது. அதனால் நல்ல நிலை அடைந்தவரின் வழி நடந்தால் நாமும் நல்ல நிலை அடையலாம் என நம்புகிறேன். வள்ளல் பெருமானுக்கும் குரு இருந்திருக்க கூடும். குரு தேவை என்று பல ஞானிகள் சித்தர்கள் சொல்லி உள்ளனர். வள்ளல்பெருமான் விதி விளக்காக இருக்க முடியாது.

நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள்
நவில் அருகர் புத்தர் முதல் மததலைவர்கள் எல்லாம்
வான் முகத்தில் தோன்றி அருள் சிறிதே அடைந்து -


நல்ல சீடன் எப்படி இருக்க வேண்டும் என பலருக்கு தெரிவது இல்லை. குருவின் மகிமை தெரிவது இல்லை.நீங்கள் நல்ல சீடனாக இருந்தால் உங்கள்ளுக்கு பதிவு உதவாது. உடல் பொருள் ஆவியை கொடுக்கணும். இல்லை என்றல் குரு அருள் இல்லை. குரு அருள் இல்லை என்றல் திரு அருள் இல்லை.

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே - திருமந்திரம்ஒரு குருவை பற்றி கருத்து ஒரு குருவை பற்றி கருத்து சொல்ல சாதாரண மக்களுக்கு தகுதி இருபது இல்லை.அவர் இருக்கும் நிலை வேறு. அவர் சீடர்கள் எப்படி இருக்க வேண்டும் என அறியாமையில் உள்ளவர்களுக்கு சொல்வது அவர் கருணை. இப்படி எல்லாம் தவறாக விமர்சனம் வரும் என்று பலர் வாயை திறப்பது இல்லை என நினைக்கிறன்.அறியாமையில் இருப்பவருக்கு எல்லாம் அறிந்தவரின் நிலைமை எப்படி புரியும். குருவை குறை சொல்ல வேண்டாம். என்னை மாதிரி "தன்னை அறியாதவனை" என்ன சொன்னாலும் பிரச்னை இல்லை. ஒரு சுத்த ஞானியை குறை சொன்ன பாவத்தை ஏற்று கொள்ள வேண்டாம்.


புத்தகம் மட்டும் படித்தால் பயன் இல்லை. பாடல் மட்டும் படித்து அர்த்தம் புரிந்தால் பயன் இல்லை.குருவிடம் சென்று உபதேசமும் தீட்சை பெற்று கண்ணில் உணர்வோடு தவம் செய்ய வேண்டும். ஒரு நல்ல சீடனாக இருந்து ....


முதல் படி தனை அறிதல்.. பிறகு தான் மற்றது எல்லாம். நம்மில் இருக்கும் அழுக்கு நீங்கினால் தான் மற்றது புரியும் என நினைக்கிறன்

நம்மை அறிய வேண்டும். அதற்க்கு தடை என்ன என்று பார்த்து சரி செய்ய வேண்டும்.மாற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இதை தான் முக்கியம் மனதுடன் உடல் அனுபவ நிலையில் இருந்து, உயிர் அனுபவத்தை பெறவே நான் சொல்லுகிறேன்.

----

தூங்கி கொண்டு இருபவரை ஓடுஓடு என்று சொன்னால் நடக்கவாவது செய்வார்கள். மற்றவர்கள் நலம் பற்றி கவலை படுவது வள்ளல் பெருமான் மூலம் அறிந்து கொண்டேன். நான் வள்ளலார் பாடலை தவிர மற்ற பாடலையும் தெரிந்து கொண்டேன். என்குரு நாதர் அருள் எப்போதும் உண்டு. ஒரு நேரத்திலும் கை விடமாட்டார். அவர் அருளாலே மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என துணிந்து அவமானங்களையும் தாண்டி சொல்லுகிறேன்.தன்னை உணராத எனக்கே 'எல்லோரும் இதை தெரிந்து கொள்ளவேண்டும் என துடிப்பு" இருக்கும் போது தன்னை
அறிந்து தலைவனை அறிந்தவருக்கு எப்படி இருக்கும்.
மற்றவர்கள் குறை சொல்லும் போது என்னை சரி செய்ய ஒரு வாய்பாக இருக்கிறது .

----------------------

நானும்  பல குருவை சந்தித்து உள்ளேன். எல்லா இடத்திலும்
முன்னேற்றம் மட்டுமே. ஒருவரிடன் செல்லும் முன் நமக்கு என்ன தேவை
அதை அவர் செய்கிரார என்று படித்து விட்டு செல்வேன். நீங்களும் அப்படி
முயன்று பாருங்கள்.

------------------