Thursday, March 21, 2013

தச நாடிகள்

தச நாடிகள்(10)
1. இடைகலை - (இடப்பக்க நரம்பு)
2. பிங்கலை - (வலப்பக்க நரம்பு)
3. சுமுழுனை - (நடுநரம்பு)
4. சிகுவை - (உள்நாக்கு நரம்பு)
5. புருடன் - (வலக்கண் நரம்பு)
6. காந்தாரி - (இடக்கண் நரம்பு)
7. அத்தி - ( வலச்செவி நரம்பு)
8. அலம்புடை - (இடச்செவி நரம்பு)
9. சங்கினி - (கருவாய் நரம்பு)
10. குகு - (மலவாய் நரம்பு)

Thursday, March 14, 2013

foot_soaking

http://www.sahajayoga.ca/Meditation/foot_soaking.htm


  • Meditate for 10 to 15 minutes.
  • You can say some affirmations to cleanse the chakras.
  • Rinse and dry your feet.
  • Flush the water down the toilet. Try not to look directly in the bucket before flushing.
  • Don’t use the foot-soak bucket for any other purpose. 
When the day is over (also anytime), relax by soaking your feet in salt water while meditating. This technique relieves the body of stress and allows for a peaceful and relaxed night's rest.Sit comfortably in a chair with your hands out on our lap, facing Shri Mataji’s photograph. Place your feet in a basin or bucket of luke warm water containing a handful of salt.

Friday, March 8, 2013

திருமந்திரத்தில் சன்மார்க்கம்


திருமந்திரத்தில்  சன்மார்க்கம் என்று ஒரு அதிகாரம் உள்ளது. அது சித்தர் மார்க்கம் என்றும் சொல்கிறது. அதில் இருந்து சில பாடல்கள். இந்த சன்மார்க்கத்தை நடத்துவது வள்ளல் பெருமான்.

ஐந்தாம் தந்திரம் - 9. சன்மார்க்கம்

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்க கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவாலயத்தோர்க்குத்
தரும் முத்தி சார் பூட்டும் சன்மார்க்கந் தானே.

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவ மாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே.

சன்மார்க்க சாதனந்தான் ஞானம் ஞேயமாம்
பின் மார்க்க சாதனம் பேதையதாய் நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கம் தான் அவனாகும் சன்மார்க்கமே.


சன்மார்க்கம் எய்த வரும் அருஞ்சீடர்க்குப்
பின்மார்க்கம் மூன்றும் பெறலியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன் மார்க்க மென்னச் சுருதிகைக் கொள்ளுமே.

பசு பாசம் நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சம் கசியக் கசிவித்
தொசியாத உண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை ஆன சன் மார்க்கமே.

மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கம் சன்மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கம் சன்மார்க்க மெனும் நெறி வைகாதோர்
மார்க்கம் சன்மார்க்கம்  அது சித்த யோகமே.

கற்பூரவள்ளிகற்பூரவள்ளி:-

வேறு பெயர்: ஓம வள்ளி


.
தாவர பெயர் Coleus Aromaticus.
Karpooravalli in Tamil
Pan-Ova in Marathi.
via http://www.facebook.com/aadhi.bagavan.1

வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும்
அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும்.இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. இதன் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். இதன் இலைகளை ஒடித்தாலோ அல்லது கிள்ளி எடுத்தாலோ நல்ல தைல வாசனை வரும். இது 2 அடிவரை வளரக்கூடியது. வேர்கள் அதிக ஆழம் செல்லாமல் கொத்து வேராக இருக்கும். இலையே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் தானாகவே வளர்கின்றது.

இது முக்கியமாக வீடுகளில் வளர்க்கக் காரணம் , இது குழந்தைகளுக்கு வரும் சளி முதலிய நோய்களுக்கு கை கண்ட மருமத்து .

பிறந்த சிறிய குழந்தைக்கு கூட நம்பி இதன் சாரை கொடுப்பதை இன்னும் காணலாம் .

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து பல நோய்களை உண்டாக்கிவிடும்.
கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வாட்டி வதைக்கும் நோய்களில் ஆஸ்துமாவும் முக்கியமானது . இந்து இயற்க்கை கெடுவதால் காற்றின் தூய்மை கெடுவதால் வருவது .. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். இளைப்பு நோய் உருவாகும். மேலும் இருமலும் ஏற்படும்.

இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமாவினால் உண்டான பாதிப்புகளிலிருந்து படிப்படியாகக் குணமடையலாம்.

மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். இவர்கள் கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

இதை இந்திய மருந்து கழகம் ஆராய்ந்து முடிவை தந்திருக்கிறது .
Based on these results, it could be suggested that Coleus aromaticus stabilizes mast cells in the rat mesenteric tissue. As mast cells play a major role in Type I hypersensitivity-mediated diseases like allergic asthma and rhinitis, [7] studies are under way to evaluate the efficacy of Coleus aromaticus due to its mast stabilization property in these animal allergic models.

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிலும் சுற்றுப்புறத்தை காக்கும் . சித்தர்கள்களுக்கு இந்த வல்லி எனும் பெயர் மேல் ஒரு ஆசை உண்டு. அமிர்த வள்ளி , கற்பூரவள்ளி என பல மூலிகைக்கு பெயர் வைத்துள்ளனர். வீட்டைச் சுற்றி கற்பூரவள்ளியை நட்டு வளர்த்தால் விஷப் பூச்சிகள் தொல்லையிலிருந்து தப்பலாம்.

இதன் இலைகள் காரம் கலந்த சுறுசுறுவென்ற சுவையுடன் இருக்கும். இதன் இலை தடித்து காணப்படும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

கற்பூரவள்ளி இலையைப் பறித்து சாறு பிழிந்து சங்களவு எடுத்து அத்துடன் கோரோசனை சிறிது இழைத்துப்போட குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் செரியாமை, காய்ச்சல் குணமாகும்.

கற்பூரவள்ளியிலைச் சாறு 100 மில்லியளவு எடுத்து சிறிது கற்கண்டை பொடி செய்து கலந்து குடித்து வர தொண்டைக் கமறல் நீங்கும். இன்னும் உருளை கிழங்கு வாழை காய் பஜ்ஜி செய்து சாப்பிட்டு வாயுத் தொல்லையில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுவதை விட ,கற்பூரவள்ளி இலையை உபயோகித்து சுவையான பஜ்ஜி செய்யலாம்

Thursday, March 7, 2013

குருபூசைத் திருநாள்

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
"காரைக்கால் அம்மையார் குருபூசை"அம்மையாரின் ஒளி மலர் திருவடிகளைப் போற்றி வணங்கி, இறைவன் திருவருளைப் பெறுவோம்.

குருபூசைத் திருநாள் :
பங்குனி திங்கள், சுவாதி விண்மீன்.
"பேயார்க்கும்அடியேன்" 07.39.04
"அடியார்க்கும் அடியேன்"

முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு வண்டார்குழலி உடனுறை ஆலங்காட்டுஅப்பர் திருக்கோயில்,
திருஆலங்காடு.

சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளூரிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துகள் உள்ளன.
----------------------22/3/2013------------------------------------
இன்று வெள்ளிக்கிழமை "எம்பிரான் முனையடுவார் நாயனார் குருபூசை"

நாயனாரின் திருவடிகளைப் போற்றி வணங்கி, இறைவன் திருவருளைப் பெறுவோம்.

குருபூசைத் திருநாள் : பங்குனி திங்கள், பூசம் விண்மீன்.

அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க்கு அடியேன்" 07.39.08 "அடியார்க்கும் அடியேன்"

முத்தித் திருத்ததலம்: 

"அருள்மிகு வேயுறுதோளியம்மை உடனுறை அருட்சோமநாதர் திருக்கோயில்", 

மயிலாடுதுறை வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம், 609203.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது.
---------------------------------mar 18 --------------------
"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று திங்கள்கிழமை "எம்பிரான் நேச நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் :
மாசி திங்கள், ரோகிணி விண்மீன்.

" வரிவளையால் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்" 07.39.11
"அடியார்க்கும் அடியேன்"

முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு கெம்பாம்பாள் உடனுறை சோமேசுவரர் திருக்கோயில்,
காம்பீலி,
பெல்லாரி மாவட்டம்.
கர்நாடகா.

*பெல்லாரி மாவட்டம் Hospet ரயில் நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது. Hospet - Hampi வழியாக KAMPLI (கம்பிலி)யை அடைய பேருந்துப் பாதையுள்ளது.

--------------------------------------------------------------------------------------------
7th march 2013
சிவாயநம"

"திருச்சிற்றம்பலம்"

இன்று வியாழக்கிழமை "எம்பிரான் காரி நாயனார் குருபூசை"

குருபூசைத் திருநாள் :

மாசி திங்கள், பூராடம் விண்மீன்.

" காரிக்கும் அடியேன்" 07.39.08

"அடியார்க்கும் அடியேன்"

முத்தித் திருத்ததலம்:

அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில்,
திருகடவூர்.
மயிலாடுதுறை.  

--------------------------------------------------------------------------------------------

28/feb/2013
"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று வியாழக்கிழமை "எம்பிரான் எறிபத்த நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் :
மாசி திங்கள், அட்டம் விண்மீன். 
"இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்" 07.39.02
"அடியார்க்கும் அடியேன்"
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில்,
கருவூர் [கரூர்] .--------------------------------------------------------------------------------------------
11/feb/2013

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று திங்கள்கிழமை "எம்பிரான் அப்பூதி நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : தை திங்கள், சதயம் விண்மீன். 
"ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்" 07.39.04
"அடியார்க்கும் அடியேன்"
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்,
திங்களூர் வழி,
திருபுவனம்,
திருவையாறு - 613 204.


----------------------------------
Feb 4 2013
"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று திங்கள்கிழமை "எம்பிரான் திருநீலகண்ட நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : தை திங்கள், விசாகம் விண்மீன். 
"திருநீல கண்டத்து குயவனார்க்கு அடியேன்" 07.39.01
"அடியார்க்கும் அடியேன்"
முத்தித் திருத்ததலம்: அருள்மிகு நடராசர் திருக்கோயில்.
கோயில் (சிதம்பரம், தில்லை)
கடலூர் மாவட்டம்.


---------------------------------------------.------------------------------------------------
jan 31 2013

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று வியாழக்கிழமை "எம்பிரான் சண்டீச நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : தை திங்கள், உத்திரம் விண்மீன். 
"மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்"07.39.03
"அடியார்க்கும் அடியேன்"
முத்தித் திருத்ததலம்: அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில்,
திருஆப்பாடி (திருவாய்ப்பாடி)
- 612 504.
திருப்பனந்தாள் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.

------------------------------------------------------------------------------------------------
jan 3 2013

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று வியாழக்கிழமை "எம்பிரான் இயற்பகை நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : மார்கழி திங்கள், உத்திரம் விண்மீன். 
"இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்.
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு சாயவனேசுவரர் திருக்கோயில், 
திருச்சாய்க்காடு.

------------------------------------------------------------------------------------------------
Dec 22 2012

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று சனிக்கிழமை "எம்பிரான் வாயிலார் நாயனார் குருபூசை"
குருபூசைத் திருநாள் : மார்கழி திங்கள், ரேவதி விண்மீன். 
"தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" 07.39.08.06
அடியார்க்கும் அடியேன்.
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்,
மயிலாப்பூர்,
சென்னை - 600 004.

------------------------------------------------------------------------------------------------
Dec 7 2012

"சிவாயநம"
"திருச்சிற்றம்பலம்"
இன்று வெள்ளிக்கிழமை 
எம்பிரான் மெய்ப்பொருள் நாயனார் குருபூசை"
குருபூசை நாள் : கார்த்திகை திங்கள், உத்திரம் விண்மீன். 
"வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்"
அடியார்க்கும் அடியேன்.
முத்தித் திருத்ததலம்:
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில், திருக்கோவலூர்,
(திருக்கோயிலூர் - 605 757.)
விழுப்புரம் மாவட்டம்.

------------------------------------------------------------------------------------------------
Sept 14 2012
"திருச்சிற்றம்பலம்"
"இன்று வெள்ளிக்கிழமை திருஇளையான்குடிமாற
நாயனார் குருபூசை"
ஆவணி திங்கள்,மகம் விண்மீன். முத்தித் தலம்: இளையான்குடி.
"இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்"

------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------

Monday, March 4, 2013

கடவுளை மட்டும் பேசி என்ன பயன்?

அன்புள்ள ஆன்மீகவாதியே கடவுளை மட்டும் பேசி என்ன பயன். முதலில் நீங்கள் யார் என்று தெரியுமா? உயிரின் சக்தியை சிந்தனை செய்தது உண்டா? உயிர் எங்கு இருந்து வந்தது? அதன் தன்மை என்ன? அதை ஏன் நம்மால் காண முடியவில்லை?. உயிரை கண்டால் மட்டுமே, நாம் வந்த இடத்துக்கு செல்ல முடியும். 

மனதை பண்படுத்தும் விஷயங்கள் உயிரை அறிய உதவாது. உயிரை காண உள்ள தடையை அழித்தால் மட்டுமே முடியும். நமக்கு இருக்கும் அறிவால் அதை செய்ய முடியுமா? எப்படி ஆங்கிலம் தெரியவில்லை என்றால் ஆசிரியரை கேட்கிறோமே? அது போலே உயிரை கண்டவர்களை அணுகி கேட்பது தானே முறை. அவர் தான் குரு. உயிரை கண்ட பிறகு தான் நான் யார் என்று தெரியும். பிறகு இறைவனை காண வேண்டும். 

உயிரை காண மனம் ஒரு தடை. மனம் கர்ம வினை/பாவ மூட்டை இருக்கும் வரை இயங்கும். தடையை நீக்க வேண்டும். மனத்தால் உயிரை அறிய முடியாது. உயிரை அறிய சும்மா இருக்க வேண்டும். மனதை சும்மா இருக்க செய்ய வேண்டும். மனம் சும்மா இருக்குமா? அதை திருவடியில் வைத்து சும்மா இருக்க வேண்டும் . திருவடியில் எவ்வளவு நேரம் சும்மா இருக்கும். திருவடியில் சும்மா இருக்க குருவிடம் திருவடி தீட்சை பெறுங்கள். இங்கு தான் குருவின் துணை தேவை.திருவடி தவம் செய்ய செய்ய உயிர் தரிசனம் கிடைக்கும். பிறகு இறைவன் தரிசனம். 
தீட்சை பெற http://sagakalvi.blogspot.in/2011/10/self-realization.html

பலியா?

“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம் சொன்னான்.

“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.

“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”

இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.

துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.

“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.

“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.

“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டான் குயவன்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்.” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார்.

“நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?”

“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்

பழமையான உணவு

சிவகாசி தபால்நிலையம் பக்கத்தில் உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தில் நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை ரசம், கத்தாழை சூப், அடுப்பில் வைக்காமல் உருவாக்கப்பட்ட பேரீச்சை அவல், பலவித பயறுவகைகள், நெல்லிக்காய் சாலட், வெந்தயக்களி, சின்ன வெங்காயம் போட்ட கம்மங்கூழ் என்று எப்போதோ, எங்கோயோ கேட்ட பழமையான பராம்பரியமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார் கடையின் உரிமையாளரும் இயற்கை ஆர்வலருமான சிவகாசி மாறன்.

நமது பழமையான உணவு என்பதை மறந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு நோய் நொடிகள், எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்நாளும் தொல்லை இல்லை என்று சொல்லும் மாறன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் விலையோ இரண்டு ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்குள் அடங்கிவிடும். ஒரு வரியில் சொல்வதானால் விலை குறைவு ஆரோக்கியம் அதிகம்.

நிலவேம்பு கஷாயம் குடித்தால் போதும் டெங்கு காய்ச்சல் பக்கத்திலேயே வராது, வந்தாலும் பயந்து ஒடிவிடும், இப்படி இங்குள்ள ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பின்னணியில் நிறைய ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன.

அடுப்பில் வைக்காமல் நூற்றுக்கணக்கான அறுசுவை உணவுகளை தயார் செய்யமுடியும், அதற்கு பெண்கள் முன்வர வேண்டும், வாரத்தில் ஒரு நாள் அடுப்பு பற்ற வைக்காமல் சமைத்தாலே நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவோ பலன்கள் உண்டு என்று சொல்லும் மாறன் இயற்கை உணவை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நிறையவே உழைத்து வருகிறார்.

இதை இளைஞர்கள் கையில் சேர்த்துவிட்டால் அது அற்புதமான ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுத்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இது தொடர்பாக பள்ளி, கல்லூரியில் பொருட்காட்சி நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார்.

இயற்கை உணவு பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக அவரது போன் எண்:9367421787.