Thursday, January 12, 2012

குரு தேவையா இல்லையா?


நாம் கற்றுக்கொண்ட அணைத்து விசயமும் மற்றவர்களிடம் இருந்தும், புத்தகங்களில் இருந்தும் வந்தது.சிந்திப்பது -> கற்று கொண்டதும் + அனுபவத்தின் கலவை. இப்படி இருக்க அனுபவமே இல்லாத ஒன்றை எப்படி தெரிந்து கொள்வது!

உங்கள் உடம்பில் இருக்கும் இதயம்/மூளை/... வேலை செய்யும் முறையை உங்களால் கட்டு படுத்த முடியுமா? உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரை தேடுகரீர்கள்? நீங்கள் சரி செய்வது தானே!!!? இப்போ சொல்லுங்க நம்மை அறிய நம்மக்கு ஒரு குரு தேவையா என்று? ஒரு அனுபவம் பெற்றவர் வேண்டுமா என்று. அவரை பார்க்க வேண்டுமா என்று?


குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ! - வள்ளலார்


குரு இல்லாமல் அதிக நேரம் எடுக்கும்/முடியாமல்
போகலாம். ஒரு காட்டில் மாட்டி இருகரீர்கள்.நீங்களே காட்டில் இருந்து வெளிவருவதும், ஒரு காட்டு வாசி(one who knows forest ) துணையுடன் வருவதும் வேறு. 

குருவின் திருவடி பனிந்து கூடுவார் அல்லார்க்கு 
அருவாய் நிற்கும் சிவம்.
 

குரு இல்லா வித்தை பாழ்.
 

குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ மகேஸ்வர, குரு பர பிரம்மா.
அவதாரங்களான ராமர் , கிருஷ்ணரும் கூட குருவை பணிந்தார்கள்.


அதனாலே குரு இல்லாமல் நாம் இறைவனை அடைவது முடியாது அல்லது கடினம்.

குருவை பற்றி சிந்திப்பதை விட நாம் நல்ல சீடராக , உண்மையான சீடராக இருப்போம்.
 

நாம் உண்மையான சீடராக இருந்தால் அந்த இறைவனே நம்மை நல்ல குருவிடம் சேர்ப்பார்.
 

நல்ல குரு கிடைக்க அந்த இறைவனை தூய்மையான பக்தியால் வணங்குவோம். முதலில் அந்த இறைவனை குருவாக கொள்ளுங்கள்.
 

3 comments:

  1. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    சரி ஐயா இதனால் என்னபயன் ஒன்றும் இல்லை .யென்றும் மாறாது இருப்பது சித்தர்களின் கூற்று மட்டும் தான் குருவை நாம் தேடி அட முடியாது .குரு நம்மை தேடி வருவார்கள் .இது அகஸ்தியரின்
    கூற்று உண்மையான குருவை தேடுங்கள் .கடவுள் உங்களை தேடி வருவார் .

    ReplyDelete
  2. இறைவன் நம்மை தேடி வருகிறார் நாம் அவர்களை கண்டு கொள்வது கூட இல்லை..நமக்கு நம்மை பற்றியே தெரியாது பிறகு எங்கே கடவுளை பற்றி தெரிந்து கொள்வது. உடல் மனம் இதையே நாம் என பொய்யான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.. நமக்கு எங்கே உண்மையை/இறைவனை தெரிய போகிறது.

    ReplyDelete
  3. I agree that "If we don't know ourself, then we cannot know the god".
    But how is it possible for us to know the Guru? whether he is the right guru or not?

    ReplyDelete