Sunday, November 4, 2012

ஆன்மீகத்தில் அடக்கம் தேவை !!


அடக்கம் அமரருள் உயிக்கும்  - திருவள்ளுவர்.
 
வள்ளுவ பெருந்தகை அடக்கமாக இருந்தால் இறவாநிலைக்கு அழைத்து செல்லும் என்று சொல்லுகிறார்.

நமது ஞானிகள் எவ்வளவு அடக்கமாக இருந்தார் என்று பாடல்கள் பார்த்தல் நமக்கு புரியும்.

வள்ளல் பெருமான்:
  நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன் 
  ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி;
   
 தீமை எலாம்   நன்மை என்றே  திருஉளங் கொண் டருளிச் 
 சிறியேனுக் அருளமுதத் தெள வளித்த



  கடியரில் கடியேன் கடையரில் கடையேன்
  கள்வரில் கள்வனேன்

என்று சொல்லுகிறார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் 

 நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா
அருள் பெற்றேன்!!


தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக் கடியேன்

மாணிக்க வாசகர்

 நின் பெரும் சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

  பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
           புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
        செமமையே ஆய சிவபதம் அளித்த
           செல்வமே சிவபெரு மானே


 அபிராமி பட்டர்

 நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.

 நாயேன்   என்றும் பேயேன் என்றும் சொல்லுகிறார்

 

 

No comments:

Post a Comment