Monday, April 16, 2012

பாரதி கண்ணன் திருவடி




பாரதி கண்ணன்/கண்ணம்மா பட்டு படித்து பாருங்கள்,
 கண்ணன் கண்ணன் என்று இருக்கும்,
கிருஷ்ணன் செத்தான் என்று இருக்கும்.
 

இடது கண் சந்திரன் வலது கண் சூரியன் சிவவாக்கியர் சொன்னது..

.வள்ளலார் பாடல் பல இடங்களில் கண் மணியில் இருக்கும் இறைவ என்று இருக்கும்.

 பட்டினத்தார் கூட கண்ணால் ஞானம் தேடு என்று சொல்லுகிறார். 

இது எல்லாம் மற்றவர்கள் அனுபவம். நமக்கு பயன் படும் என்ற கருணையோடு
எழுதி உள்ளனர்.



சித்தர்கள் மதம் ஜாதி கடந்து, இறைவன் ஒருவரே என்ற கொள்கை உடையவர்கள். ஜாதி கடந்து மதம் கடந்து இறைவனை உணர்ந்தவர்கள். அதை அடைய எளிய வழி சொல்லி உள்ளனர்.

 கண்ணன் என்பது கண்ணில் இருக்கும் இருக்கும் இறைவனை குறிக்கிறது. கண்ணன் என்பது ஒரு சமய/மத பெயர் கிடையாது. 

பாரதிக்கு ஒரு இலங்கையில் சித்தர் குருவாய் இருந்ததாக படித்தேன். சித்தர் வழி நடப்பவர்களுக்கு எல்லாம் கண் திருவடி என்று தெரியும். அவர்கள் ரகசியம் காக்க வேண்டியதால் இதை நேரடியாக வெளியே சொல்ல மாட்டார்கள். இந்த குழுமத்தில் இருக்கும் பலருக்கு திருவடி கண் என்று தெரியும். யாரும் சொல்லுவது இல்லை. என் குரு இதை ரகசியம் காக்காமல் வெளிப்படை சொல்லி உள்ளார்.

இது ரகசியமாய் இருந்ததே பலருக்கு தெரியாது. புத்தகத்தில் கூட இருக்காது. வெளிபடை யாய் சொல்வதால் இது பொய் என்றும் நினைகிறார்கள்.


1 comment:

  1. அந்த பேரொளியுடன் கலந்த பின்பு மறைக்க ஏதுமில்லை. இருள் இருந்தால்தானே மறைந்து, மறைத்து வைப்பதற்கு. அவரே வெட்ட வெளிச்சமாகிவிட்டவர், ஆகையால் அனைத்தும் வெளிப்பட்டு விட்டது. அவரின் கருணை எல்லையற்றது.பகிர்விற்கு மிக்க நன்றி அன்பரே !🙏

    ReplyDelete