Sunday, December 8, 2013

சென்னிமலை- பிண்ணாக்கீசர் ஜீவசமாதி

சென்னிமலை- பிண்ணாக்கீசர் ஜீவசமாதி
> காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற தெய்வீகத் திருத்தலமாக சென்னிமலை அமைத்துள்ளது ..இங்கு முருகப்பெருமான் கருணையே வடிவாய் அருள்பாலிக்கிறார் .
> இக்கோவிலில் தான் சிறப்பாக தெய்வத்திரு பாலதேவராயனால் கந்த சஷ்டி கவசம் எழுதி அரங்கேற்றம் செய்யப்பட்டது ..மூல கருவறையில் முருக பெருமான் அருள் செய்ய அவர் பின்புறம் தனி சன்னதி கொண்டு வள்ளி தெய்வானை காட்சி தருகிறார்கள் ..
> அதற்கும் சற்று மேலே 18 சித்தர்களின் ஒருவரான பிண்ணாக்கீசர் ஜீவசமாதி கொண்டுள்ளார் இங்கே இவர்க்கு தன்னாசியப்பர் என்ற நாமமும் உள்ளது ..( பிண்ணாக்கீசர்-பின் நாக்கு -பிளவு பட்ட நாக்கு -பிளவு பட்ட நாக்கினால் யோக சித்தி பெற்றவர் )
> இங்கிருத்து பழனி வரை செல்லும் சுரங்க பாதை ஒன்று உள்ளது..காண கண் கோடி வேண்டும் ..ஒரு முறை சென்று வாருங்கள்
 
> பிண்ணாக்கீசர் ஜீவ சமாதிக்கு அருகே சரவணமுனிவர் எனும் முனிவரின் சமாதியும் உள்ளது ..இயற்கை மலை அழகு காண காண மனதில் மகிழ்ச்சியும் , அருமையான தெய்வீக அனுபவங்களைப் பெறலாம் ..ஒருமுறை வந்து பாருங்கள் ...

1 comment:

  1. மிகவும் ஆச்சரியமான விஷயம் ! நன்றி.

    ReplyDelete