Wednesday, March 7, 2012

அனுபவம் 1

தன்னை உணர உள்ளே தேடவேண்டும்.. அதுவரை இறைவன் ஒரு கற்பனை பொருளே... தன்னை அறிந்த பின் இறைவனை அறியலாம்... நாம் பிறந்த நாள் முதல் நமக்கு எல்லாம் சொல்லி கொடுத்தது மற்றவர். அப்பா அம்மா இவர் தான் என்று நமக்குத் தெரியாது. அது மற்றவர் சொல்லி தான் தெரியும்(குழந்தையாக இருக்கும் போது இருந்து) இப்படி உலகில் கற்றது எல்லாம் மற்றவர் சொல்லி தெரிய வந்தது. அப்பா அம்மா ஆசிரியர் புத்தகம்
 ...... அப்படி பார்த்தல் நமக்கு ஒன்றுமே தெரியாதே! ஒன்றுமே தெரியாத நமக்கு உள்ளிருக்கும் நம்மை அறிவது மட்டும் எப்படி சாத்தியம். அதனால் நமக்கு ஒரு குரு தேவை.மாதா பிதா குரு தெய்வம்... மாதா பிதா அனைவருக்கும் உண்டு... குருவை கொண்டு இறையை அறிய வேண்டும்....

நீங்கள் சொல்வது சரி. கும்பிட்டே வாழ்வை கழித்து விட கூடாது. ஆனால் குரு இன்றி திரு அருள் இல்லை.இந்த பதிவு பாருங்கள்
http://sagakalvi.blogspot.in/2011/12/blog-post_21.html



யாரையும் புண் படுத்த சொல்ல வில்லை. புத்தர் ஆன்மீகத்தில் பெரிய நிலை அடைய வில்லை என்று வள்ளல் பெருமான் சொல்லி உள்ளார். இதே கருத்து திருவாசகத்தில் குறிப்பு உள்ளது. அதனால் நல்ல நிலை அடைந்தவரின் வழி நடந்தால் நாமும் நல்ல நிலை அடையலாம் என நம்புகிறேன். வள்ளல் பெருமானுக்கும் குரு இருந்திருக்க கூடும். குரு தேவை என்று பல ஞானிகள் சித்தர்கள் சொல்லி உள்ளனர். வள்ளல்பெருமான் விதி விளக்காக இருக்க முடியாது.

நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள்
நவில் அருகர் புத்தர் முதல் மததலைவர்கள் எல்லாம்
வான் முகத்தில் தோன்றி அருள் சிறிதே அடைந்து -


நல்ல சீடன் எப்படி இருக்க வேண்டும் என பலருக்கு தெரிவது இல்லை. குருவின் மகிமை தெரிவது இல்லை.நீங்கள் நல்ல சீடனாக இருந்தால் உங்கள்ளுக்கு பதிவு உதவாது. உடல் பொருள் ஆவியை கொடுக்கணும். இல்லை என்றல் குரு அருள் இல்லை. குரு அருள் இல்லை என்றல் திரு அருள் இல்லை.

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலும் ஆமே - திருமந்திரம்



ஒரு குருவை பற்றி கருத்து ஒரு குருவை பற்றி கருத்து சொல்ல சாதாரண மக்களுக்கு தகுதி இருபது இல்லை.அவர் இருக்கும் நிலை வேறு. அவர் சீடர்கள் எப்படி இருக்க வேண்டும் என அறியாமையில் உள்ளவர்களுக்கு சொல்வது அவர் கருணை. இப்படி எல்லாம் தவறாக விமர்சனம் வரும் என்று பலர் வாயை திறப்பது இல்லை என நினைக்கிறன்.அறியாமையில் இருப்பவருக்கு எல்லாம் அறிந்தவரின் நிலைமை எப்படி புரியும். குருவை குறை சொல்ல வேண்டாம். என்னை மாதிரி "தன்னை அறியாதவனை" என்ன சொன்னாலும் பிரச்னை இல்லை. ஒரு சுத்த ஞானியை குறை சொன்ன பாவத்தை ஏற்று கொள்ள வேண்டாம்.


புத்தகம் மட்டும் படித்தால் பயன் இல்லை. பாடல் மட்டும் படித்து அர்த்தம் புரிந்தால் பயன் இல்லை.குருவிடம் சென்று உபதேசமும் தீட்சை பெற்று கண்ணில் உணர்வோடு தவம் செய்ய வேண்டும். ஒரு நல்ல சீடனாக இருந்து ....


முதல் படி தனை அறிதல்.. பிறகு தான் மற்றது எல்லாம். நம்மில் இருக்கும் அழுக்கு நீங்கினால் தான் மற்றது புரியும் என நினைக்கிறன்

நம்மை அறிய வேண்டும். அதற்க்கு தடை என்ன என்று பார்த்து சரி செய்ய வேண்டும்.மாற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இதை தான் முக்கியம் மனதுடன் உடல் அனுபவ நிலையில் இருந்து, உயிர் அனுபவத்தை பெறவே நான் சொல்லுகிறேன்.

----

தூங்கி கொண்டு இருபவரை ஓடுஓடு என்று சொன்னால் நடக்கவாவது செய்வார்கள். மற்றவர்கள் நலம் பற்றி கவலை படுவது வள்ளல் பெருமான் மூலம் அறிந்து கொண்டேன். நான் வள்ளலார் பாடலை தவிர மற்ற பாடலையும் தெரிந்து கொண்டேன். என்குரு நாதர் அருள் எப்போதும் உண்டு. ஒரு நேரத்திலும் கை விடமாட்டார். அவர் அருளாலே மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என துணிந்து அவமானங்களையும் தாண்டி சொல்லுகிறேன்.தன்னை உணராத எனக்கே 'எல்லோரும் இதை தெரிந்து கொள்ளவேண்டும் என துடிப்பு" இருக்கும் போது தன்னை
அறிந்து தலைவனை அறிந்தவருக்கு எப்படி இருக்கும்.
மற்றவர்கள் குறை சொல்லும் போது என்னை சரி செய்ய ஒரு வாய்பாக இருக்கிறது .

----------------------

நானும்  பல குருவை சந்தித்து உள்ளேன். எல்லா இடத்திலும்
முன்னேற்றம் மட்டுமே. ஒருவரிடன் செல்லும் முன் நமக்கு என்ன தேவை
அதை அவர் செய்கிரார என்று படித்து விட்டு செல்வேன். நீங்களும் அப்படி
முயன்று பாருங்கள்.

------------------

1 comment: