Saturday, July 14, 2012

வள்ளலார் கண்ணொளி பற்றி பாடிய பாடல்கள்

கண்ணொளி காட்டு மருந்து - அம்மை
கண்டு கலந்து களிக்கு மருந்து  -  நல்ல மருந்து 

ஏதம் அகற்றும் என் அரசே என் ஆருயிரே என்அறிவே
என்கண் ஒளியே என்பொருளே என் சற்குருவே என்தாயே  -
செல்வச் சீர்த்தி மாலை


கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே-
மகாதேவ மாலை 

கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே - .சற்குருமணி மாலை 



மெய்யநின் திருமேனி கண்டபுண் ணியர்கண்கள்
மிக்க ஒளி மேவுகண்கள் - தெய்வமணி மாலை 



கண்ணே அக்கண்ணின் மணியே மணியில் கலந்தொளி செய்
விண்ணே வியன்ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
 பெண்ணே மலைபெறும் பெண்மணியே தெய்வப் பெண்ணமுதே
- வடிவுடை மாணிக்க மாலை 

கண்ணேஎன் இருகண் இலங்குமணியே என்உயிரே
என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு
இருந்தசிவ மேஎன் அன்பே -- .திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்


No comments:

Post a Comment